பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மாண்புகள் இவ்வொப்புமை வாயிலாகச் சிதைவுறுதல் கூடும். இந்நுட்பத்தினை நன்குனர்ந்த முன்னைத் தமிழ்ச் சான்றோர் தெய்வமாகிய கருப்பொருளை நிலைக்களனாகக் கொண்டு உள்ளுறை கூறுதல் கூடாதென்றும் தெய்வம் நீங்கலாகவுள்ள ஏனைய கருப்பொருள்களையிடனாகக் கொண்டே உள்ளுறையுவமை கூறுதல் வேண்டுமென்றும் வரையறை செய்தார்கள். இவ்வரையறையினை,

“உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்

கொள்ளு மென்ப குறியறிந்தோரே”

என வரும் சூத்திரத்தில் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட பண்டைத் தமிழ்மக்கள் தெய்வங் கொள்கையிற் கொண்டிருந்த நன் மதிப்பும் தொல்காப்பியனார் தெய்வங் கொண்டுள்ள உறுதிப்பாடும் நன்கு புலனாதல் காணலாம்.

தமது நாட்டில் உரிமை வாழ்வினைப் பேணிக் காக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் போர்க்களத்துப் பகைவரோடு பொருது உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட தறுகண் வீரரை நாட்டுமக்கள் தெய்வமாக எண்ணி வழிபடுதற் பொருட்டு அவர்தம் பெயரும் பீடும் பொறித்தற்குரிய கல்லினைத் தேர்ந்து காணுதலும் பின்னர் அங்ங்ணம் பொறிக்கப் பெற்ற கல்லினை நீர்ப்படுத்தலும், நடுதலும், கோட்டம் செய்தலும், அதனை வாழ்த்துதலும் பண்டைத் தமிழர் கொண்டொழுகிய வீர வணக்கம் ஆகும்.

இன்னவுரு இன்னநிறம் என்றறிய வொண்ணாத நிலையில் உலகுயிர்களின் உள்ளும் புறம்பும் கலந்து நின் இ! இயக்கி நிற்கும் பேரறிவுப் பொருளாகிய இறைவனைக் ‘கடவுள்' என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித் துள்ளார். கடவுதல் - செலுத்துதல். அனுமுதல் அண்டமீறாகிய பொருள்களையும் உயிர்த் தொகுதிகளையும் அகத்தும் புறத்தும் ஊடுருவி நின்று ஒர் ஒழுங்குமுறையிற் செலுத்துதல் பற்றி முழுமுதற் பொருளாகிய அது கடவுள் என்னும் பெயருடையதாயிற்று. இறைவன் இயவுள் என்னும் பெயரும்

2. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 50.