பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தாரனையாவது தாங்கி நிற்றல், இது பொறை எனவும் பெயர் பெறும். மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறை நிலை என்பது சிலப்பதிகார உரை மேற்கோள். புலன்வழிப் படராமல் அகமுகப்பட்டு நிற்கும் மனத்தினைக் குறிக்கத் தக்க பொருளாகிய சிவத்தினிடத்தே கொண்டு செலுத்தி அது கீழ்நோக்கிச் செல்லாதபடிப் பிணித்து நடுநாடியின் உள்வழியாக ஆறு ஆதாரங்களையும் கடந்து மேலைப் பெருவெளியை நோக்கிக் காணாத கண்களும் கேளாச் செவிகளும் எனக் கண்டோர் கருதும்படி இறைவனை அகத்தே நோக்கி நிற்கும் தாரனைப் பயிற்சி யுடையார்க்கு அப்பயிற்சி வாழ்நாள் வீணே கழியாதபடி அடைத்துக் காக்கும் உபாயமாகும் (திருமந்திரம் 568) என்பர் திருமூலர்.

தியானமாவது தாரணையில் நிறுத்தப்பட்ட உள்ளமானது ஐம்புலன்களாலும், அவற்றால் எய்தும் நுகர்ச்சிகளாலும் திரிபு அடையாமல் மெய்ப்பொருளாகிய இறைவனுடன் ஒன்றித் தொடர்புறும் நீளநினைதலாகும்

எண்ணாயிரம் ஆண்டுகள் யோகநிலையில் (உள்ளத்தை ஒருமைப்படுத்தி) இருந்தாலும் (தியானிப்போர்) கண்களாற் பருகுதற்கினிய அமுதமாகக் காட்சி நல்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டறிவார் இல்லை. (அம் முதல்வனை அவனருளால்) தம் உள்ளத்துள்ளே நாடி அகத் தெழுஞ் சோதியின் ஒளி தோன்றுமாறு இருந்து நோக்கி ன்ால் கண்ணாடியினுள்ளே வடிவந்தோன்றுமாறு போல அம்முதல்வன் உள்ளத்துள்ளே கலந்து தோன்றுவான் எனத் தியானமாமாறும் அதன் பயனும் பற்றித் திருமூலர் நவின்றுள்ளார்.

சமாதி என்பது இயமம் முதலான யோக அங்கங்கள் ஏழிலும் பயிற்சி நிரம்பிய ஆன்மா, தன்னை மறந்து சிவத்துடன் ஒன்றியுனரும் நிலையாகும். ஞானத்தின் நுண்மை நிலையாகிய இதனை நொசிப்பு என வழங்குதல் தமிழ் மரபாகும்.

"கற்பனையற்றுக்கனல்வழியேசென்று

சிற்பனை யெல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்