பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கனமுடைய பொருளையும் ஆகாயத்தினும் நொய்தாகச் செய்யும் திறன். பிராப்தி - வேண்டியவெல்லாம் விரும்பிய வாறு அடையப்பெறுதல். பிராகாமியம் விரும்பிய நுகர் பொருள்களைப் படைத்து விரும்பிய பலவடிவிற் புகுந்து அவற்றை நுகர்தல். ஈசத்துவம் - தத்துவங்களை நீங்காமல் நின்று அவற்றை நடத்தும் இயல்பினால் தேவர் முதலியோரால் வழிபடப் பெறுதல் வசித்துவம் - எல்லா உலகங்களையும் தன்வசப்படுத்துதல். இவ்வெண்வகைச் சித்திகளையும்,

“தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்

மானாக் கணமும் பரகாயத்தேகமும் தானாவதும் பரகாயஞ் சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் வியாபியும் ஆம்எட்டே'

(திருமந்: 849)

எனத் திருமூலர் விளக்கியுள்ளமை காணலாம்.

நன்னெறியினை நாடிய சாதகன், தான் இப்பிறப்பிற் கொண்டுள்ள ஓர் உடம்பில் இருந்து கொண்டே தான் வேண்டிய பயன்களைப் பெறுதல் வேண்டும். அதற்கு உபாயம் தனது உடம்பினை நெடுங்காலம் நிலைபெறச் செய்தலேயாகும் மூன்றாந் தந்திரத்தின் உள்ளுறையாவது சரீரசித்தி உபாயமாகும். உடம்பின்றி உயிர்த் தனித்து நின் Js): தொழில் புரிதல் இயலாது. அறம் முதலிய உறுதிப் பொருள்களை உயிர் பெறவேண்டுமாயின் அதற்குரிய முயற்சிகளை உடம்பொடு கூடி நின்றே செய்தல்வேண்டும். ஆகவே ஞானசாதனமாகிய உடம்பினைப் பேணுதல் உயிருக்கு இன்றியமையாதது என்னும் உண்மையினை,

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ்சேரவுமாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே'

(திருமந்திரம் 724) "உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளேயுறுபொருள் கண்டேன்