பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

589


உடம்புளே யுத்தமன் கோயில் கொண்டானென் றுடம்பினை யானிருந்தோம்புகின்றேனே.”

(திருமந்திரம் 725)

என வரும் திருமந்திரங்களால் திருமூலர் அறிவுறுத்தி யருள்கின்றார்.

மேற்குறித்த வண்ணம் இயமம் நியமம் முதலிய எண்வகை யோக வுறுப்புறுப்புக்களால் உடம்பினைப் பேணி மனத்தினை ஒருமை நிலையிற் கொணர்ந்து சிந்தையில் எழுந்தருளிய முழுமுதற்பொருளை நினைந்து போற்றும் தவநெறியினை 'நாலிருவழக்கின் தாபதப்பக்கம்’ (தொல். புறத்.) என்பர் தொல்காப்பியனார். உடம்பினைத் தூய முறையில் நன்கு பேணிச் சரியை கிரியை ஆகிய நெறிகளிற் பயின்ற பின்னர்ச் சிவயோகத்தில் நிலைபெற்று அமர்ந்து சிவஞானமாகிய பயனைப் பெறுதற்கு நிறைமொழி மாந்தராகிய பெருமக்கள் அருளிய மறைமொழிகளாகிய மந்திரங்களின் பயிற்சியும் அவற்றின் வன்மையுமே பெறுதல் இன்றியமையாததாகும். எனவே இத்திருமந்திரத்தின் நாலாந் தந்திரத்தில் திருவம்பலச் சக்கரம் முதலிய மந்திரச் சக்கரங்களின் உபாசனை முறைகள் விரிவாக விளக்கப் பெற்றுள்ளன. நாலாந்தந்திரம் அசபை முதல் நவாக்கரி சக்கரம் ஈறாகப் பதின்மூன்று தலைப்புக்களையுடையது. இதன்கண் தெய்வம் நிலைபெறும் மந்திரச் சக்கரங்களின் வடிவம், அளவு, வரைகள், அவ்வரைகளினுள்ளே அடைக்கப்பெறும் மந்திர எழுத்துக்கள், உரிய மந்திரங்கள், அவற்றை அருச்சிக்கும் முறைகள், அவ்வவற்றின் அதி தெய்வங்கள், வலிமை, பயன் முதலியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இன்ன சக்கரத்தை இன்ன சாதனத்தில் எழுதி இன்ன இடத்தில் இன்னவாறு மேற்பூச்சும் அணியும் மலரும் முதலியன சாத்தி இன்னபடி இத்தனை காலம் வழிபட்டால் வசியம் முதலாகச் சொல்லப்படும் உலகியற் பயன்களுள் இன்னின்ன பயன்களை எளிதிற் பெறலாம் என்ற செயல் முறைகளைத் திருமூலதேவர் இத்தந்திரத்தில் விரித்துக் கூறியுள்ளார். இறைவன் தனது திருவருளாகிய சத்தியின் மூலமாகவே மன்னுயிர்கட்கு அருள்புரிவா