பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

591


ஆசிஇட்டு

ஒரெழுத்து மந்திரமாகிய இது, மந்திரங்களுக் கெல்லாம் அடிப்படையானது. நாவினாற் செபிக்கப் படாமல் உயிர்வளியாகிய பிராண்னுடன் இழைந்து இயங்கும் மந்திரமாதலின் அசபை (செபிக்கப்படாதது) எனப் பெயர் ப்ெற்றது. ஹ்ம்ஸ் என்றும் இதனை அம்ச மந்திரமென்றும் அன்னமந்திரம் என்றும்.அங்குசம் என்றும் வழங்குதல் உண்டு. ஓரெழுத்து மந்திரமாகிய அசபையின் இயல்பும் அதனைச் செபிக்கும் முறையும் 884,906ஆம் திருமந்திரப் பாடல்களில் உணர்த்தப்புெற்றன.

திருவம்பலச்சக்கரம்

மந்திரங்களின் மேம்பட்ட திருவைந்தெழுத்திற் கமைந்த சக்கரங்களுள் சிறப்புடையது திருவம்பலச் சக்கர்மாகும். சிதாகாசப்பெருவெளியில் அற்புதத் தனிக் கூத்தாடும். அம்பலவாணர் அருட்சத்தியாகிய சிவகாமி யம்மையுடன் மந்திரவடிவாய் நின்று நிலவுவது. இந்த யந்திரமாகும். மந்திரத்தலையாக விளங்குவது இத்திரு வம்பலச் சக்கரமாகும். திருவைந்தெழுத்தே இறைவனுக் குரிய திருமேனியாகத் திகழ்கின்ற்திென்பதனை விளக்குவது,

'அஞ்செழுத்தாலேயமர்ந்தனன் நந்தியும். அஞ்செழுத்தாலே யமர்ந்த பஞ்சாக்கரம் அஞ்செழுத்தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத்தாலே யமர்ந்திருந்தானே” (திருமந் 934)

எனவரும் திருமந்திரமாகும். "நந்தியாகிய இறைவன் அஞ்செழுத்தாகிய மந்திர வடிவாக அமர்ந்துள்ளான். அவன் விரும்பியமர்ந்த பஞ்சாக்கரமும் ஐந்தெழுத்தால் ஆகியதே. ஐந்தெழுத்தாகிய அக்கரங்கள் அடைக்கப்பெற்ற சக்கரத் துள்ளே ஐந்தெழுத்தையே மனது திருமேனியாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான்” என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இதனை அடியொற்றி யமைந்தது,