பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்

அஞ்செழுத்தே ஆதிபுராண மனைத்தும்- அஞ்செழுத்தே ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்டாலாம் மோனந்த மாமுத்தியும்” (44)

எனவரும் உண்மை விளக்கச் செய்யுளாகும். எல்லாம் வல்ல இறைவன் நாதமுடிவிலே திருவைந்தெழுத்தினையே தனக்குரிய திருமேனியாகக் கொண்டு ஆடல் புரிந்தருளும் முறைமையினை அறிவுறுத்துவது,

“ஆகின்ற பாதமும் அந்நவாய்நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிரு தோள் வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுடர் அவ்வியல் பாமே” (திருமந். 941)

எனவரும் திருமந்திரமாகும். “உயிர்கட்கு ஆக்கமளிக்குந் திருவடியும் அந்த நகாரமாய் நிலைபெறும். உந்திச்சுழியுள் அவ்விடத்திலே மகாரம் பொருந்துவதாகும். சிகாரம் இரண்டு தோள்களாகவும் வகாரம் வாயாகவும் கண்டபின், திருமுடிக்கண் விளங்குகின்ற சுடர் யாகாரத்தின் தன்மைய தாகும்” என்பது இதன் பொருள்.

“நவ்விரண்டு காலதாய்நவின்றமவ்வயிறதாய்

சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்த வவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் எழுத்துநின்ற நேர்மையிற் செவ்வையொத்துநின்றதே சிவாயமஞ்செழுத்துமே” (97)

என வரும் சிவவாக்கியர் பாடல் இத்திருமந்திரத்தை அடியொற்றியதாகும்.

பொன்னம்பலத்திலே ஆடல் புரிந்தருளும் இறைவன், தன் திருவடியிலே நகரமும், திருவுந்தியிலே மகரமும், திருத்தோள்களிலே சிகரமும், திருமுகத்திலே யகரமும் ஆகவும் திகழுந்திறத்தினை,

"ஆடும்படிகேள்நல்வம்பலத்தான் ஐயனே

நாடுந்திருவடியிலே நகரம் - கூடும்