பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பொருள்களை நோக்காது தன்னளவில் அறிவுப்பிழம்பாய் நிற்கும் நிலையிற் சிவம் எனவும், தனது அருளால் மன்னுயிர்களை நோக்கும் நிலையிற் சத்தி எனவும், அப்பனும் அம்மையும் என இருதிறமாகக் கூறப்பெறுவன். இறைவனது திருவருள் ஞானசத்தியாய்ச் சுத்தமாயையில் தோய்ந்த பகுதி சிவதத்துவம் எனவும், கிரியா சத்தியாய்த் தோய்ந்த பகுதி சத்தி தத்துவம் எனவும், ஞானமும் கிரியையும் சமநிலையில் தோய்ந்த பகுதி சதாசிவ தத்துவம் எனவும், ஞானமும் கிரியையும் ஆகி ஒத்துத் தோய்ந்த பகுதி மகேசுர தத்துவம் எனவும், கிரியை குறைந்து ஞானம் மிகுந்து தோய்ந்த பகுதி சுத்தவித்தை எனவும் இவை ஐந்தும் சுத்தத்தத்துவங்கள் எனவும் வழங்கப்பெறும். இத் தத்துவங்கள் ஐந்தும் இறைவனுக்குச் சுதந்திர வடிவங்களாகும்.

சிவம், சத்தி, நாதம், விந்து என்னும் நான்கும் அருவத் திருமேனிகள்.

சதாசிவம் ஒன்றும் அருவுருவத்திருமேனி.

மகேசன், உருத்திரன், மால், அயன் என்னும் நான்கும் உருவத் திருமேனிகள். இறைவன் இவ்வொன்பது வகையாக நின்று உயிர்கட்கு அருள் புரிவன் என்பார்.

சிவஞ்சத்திநாதம்விந்து சதாசிவன்திகழும் ஈசன் உவந்தருள் உருத்திரன்றான் மால் அயன்

ஒன்றினொன்றாய்ப் பவந்தரும் அருவம் நாலிங்குருவம் நால்உபயம் ஒன்றாம் நவந்தருபேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்”

(சிவஞானசித்தி. சுபக்கம். 164)

என்றார் அருணந்தி சிவாசாரியார்.

திருமந்திரத்தின் ஐந்தாந்தந்திரம் சுத்தசைவம் முதலாக உட்சமயம் ஈறாக இருபது உட்பிரிவுகளை யுடையதாகும். இதன்கண் நால்வகைச் சைவமும், சரியை, வரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறி களும், அவைபற்றியமைந்த தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நெறி