பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

598


நால்வகை pರ್ಥಿಗಿ இயல்பினை விளக்குவது,

& K. - - t o

பாசம் பசுவான தாகும் இச்சாலோகம்

பாசம் அருளானதாகும் இச்சாமீபம் பாசம் சிவமான தாகும் இச்சாரூபம் பாசம் கரைபதி சாயுச் சியமே” (திருமந். 1509)

எனவரும் திருமந்திரமாகும். சடமாகிய பாசம் ஆன்மாவின் அறிவெல்லைக்குள் அடங்கி நிற்க இறைவனை வழிபட்டு மகிழும் நிலை இறைவனுலகில் ஒப்ப உறைதலாகும். உயிரைப் பிணித்துள்ள பாசம் உயிரறிவை மறைத்தலாகிய தன்மை யினை யிழந்து அருளினால் விலகத்தான் இறைவனையணுகி நிற்றல் இறைவனது அருகிருத்தலாகும். பசுகரனங்களாகிய பாசப்பகுதி பதிகரணங்களாக மாறுதல் இறைவனுருப் பெறுதலாகும். பாசஞானமான நூலறிவும் பசுஞானமான ஆன்மபோதமும் கரைந்தொழியப் பதியாகிய பரம் பொருளுடன் இரண்டறக் கலந்து ஒன்றாதல் சாயுச்சியம் எனப்படும்.

சிவம் என்னும் பெயரடியாகப் பிறந்தது சைவம் என்னும் பெயராகும். சிவன் என்ற சொல் தனித்தமிழ்ச் சொல் என்பது 'செம்மேனிப் பேராளன் வானோர்.பிரான் என்னும் காரைக்கால் அம்மையார் வாய்மொழியாலும் 'சிவனெனும் நாமந்தனக்கேயுடைய செம்மேனியம்மான் எனவரும் அப்பரருள்மொழியாலும் நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம். திருவுருவநிலையிற் சிவன் என அன்னிறாக வைத்துப் போற்றப்பெறும் இறைவனை உருவங்கடந்த நிலையில் செம்பொருள் எனவும் சிவம் எனவும் போற்றுதல் நெடுங்காலமாக நிலைபெற்று வரும் தமிழ்மரபாகும்.

“செம்பொருளாய சிவமெனலாமே.

எனவரும் திருமந்திரம் இம்மரபினை இனிது புலப்படுத்துவ தாகும். சிவம் என்ற தமிழ்ச் சொல்லின் அடியாக வடமொழித் தந்திதாந்த விதியை யொட்டியுருவாகிய சொல்லே சைவம் என்பதாகும். இதனால் ஆரியம் தமிழ் என்னும் இருமொழி நூல்களிலும் சிவ வழிபாடு பற்றிய