பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

601


உடனிருந்து காட்டி அதனைத்தானும் காணும் உயிரைப்போன்று, அறிவிக்க அறியுந்தன்மையதாகிய ஆன்மா பொருள்களை அறியும்படி இறைவன் அதனோடு உடனாய்நின்று உயிர்க்கு அறிவித்துத் தானும் அவ்விடயங் களிற் கலந்து அறிந்து உதவி செய்தலால், இவ்வாறு உயிருடன் அத்து விதமாய் நின்று உதவி செய்தருளும் இறைவனது பெருங்கருனைத்திறத்தை மறவாது நினைந்து செய்யும் பேரன்பினாலே அம்முதல்வனுடைய திருவடி யாகிய சிவானந்த அநுபவத்தை ஆன்மா தலைப்பட்டு மகிழ்தலே சைவசமயம் கூறும் வீடுபேறாகும் என்பது அறிவுறுத்துவார், சைவஞ்சிவானந்தஞ் சாயுச்சியமே” என்றார் திருமூலர். இத்திருமந்திரத்தின் முதலடியில் முப்பொருள்களின் உண்மையும் இலக்கணமும், இரண்டாமடியிற் சாதனமும், மூன்றாமடியிற் பாசநீக்கமும், நான்காமடியிற் சிவப்பேறும் குறிப்பாக விளக்கப் பெற்றுள்ளமை கூர்ந்துனரத்தகுவதாகும்.

உயிர்களைத் தோற்றமில் காலமாகப் பிணித்துள்ள அகவிருளாகிய ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தினை அடைதற்பொருட்டு அதற்குத் துணையாய் நின்று நடத்திய இறைவனது மறைப்பாற்றலாகிய திரோதான சத்தியானது, இருள் மலம் கழலும் பக்குவத்தினை யடைந்தபோது கருனைமறமாக இருந்த தன்னுடைய செய்கை மாறிக் கருணை யெனப்படும் பண்டைப் பராசத்தி யுருவேயாய் உயிர்கள்பாற் பதிதல் சத்தி நிபாதம் எனப்படும். சத்தி நிபாதம் - திருவருட்சத்தி உயிர்களிற் பதிதல். அதுபடிகால் முறையால் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்பட்டு நிகழும். அவற்றின் இயல்பினை 1514 முடியவுள்ள திருமந்திரப் பாடல்கள் விரித்துரைக்கின்றன.

ஆணவமாகிய மலவிருளால் தடைப்பட்டிருக்கின்ற ஆன்ம சத்தியாகிய அறையின் மூலையிற் சிறிதும் தோன்றா வண்ணம் கட்டுநிலையிலிருந்த ஆன்மாவை அதன் இயல்புக் கேற்பச் செலுத்தும் மறைப்பாற்றலாகிய திரோதான சத்தியானது, ஆன்மாவின் ஆணவமலம் கழலும்