பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அளவில் முன்னர்க் குருட்டுக் கிழவனாக்கிடந்த ஆன்மாவுக்கு முன்னின்று அருள்செய்ய நினைந்து அவனது இருள்மலத் தன்மையாகிய குருட்டினை நீக்கி இறைவனது திருவருளாகிய தன் இயல்புகள் பலவற்றையும் புலப்படுத்திக்காட்டி, ஆன்மா உற்ற தற்போதத்தை மழுங்கச் செய்து தனது அருளாரின் பத்தினை ஆன்மா வுணர்ந்து நுகரும்படி சிவத்துடன் ஒன்றச் செய்தருளியது என்பார்,

"இருட்டறை மூலையிருந்த குமரி

குருட்டுக் கிழவனைக் கூடல்குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புரிந்தாளே” (திருமந். 1514)

என்றார் திருமூலநாயனார். இப்பாடலில் இருட்டு’ என்றது ஆணவ இருளை. அவ்விருளாற்பற்றப்பட்ட அறைமூலை’ என்றது, ஆணவல்லிருளால் அடர்க்கப்பட்டிருந்த ஆன்ம சிற்சத்தியை. அதிலிருந்த குமரி என்றது, ஆணவமலம் கழலும் பக்குவத்தையடையும்படி மறைந்து நின்று ஆன்மா வைச் செலுத்திய திரோதான சத்தியினை. குருட்டுக்கிழவன் என்றது, தோற்றமில் காலமாக ஆனவல்லிருளிலகப்பட்டு அறிவாகிய கண்னொளியிழந்த ஆன்மாவை, அதனைக் கூடுதலாவது, ஆணவ மலத்துடன் மறைந்து நின்ற திரோதான சத்தியானது அருட் சத்தியாக மாறி ஆன்மாவின் முன்னிற்றலை, குறித்தல் என்றது, ஆன்மாவின் கண் அருளாய்ப் பதிதலை, குருடு என்றது, ஆணவ மலமாகிய படலத்தால் மறைக்கப்பட்டு ஒளியிழந்த தன்மையினை. குனம்பல காட்டுதலாவது, அருளாகிய தன்னியல்புகள் பலவற்றையும் புலப்படுத்தித் தெருட்டுதல், மருட்டுத லாவது, ஆன்ம போதத்தை மழுங்கச் செய்தல். மணம் புரிதலாவது, சிவபோகத்தை நுகர்தற்கு உரிய நிலையில் ஆன்மாவைச் சிவத்தோடு கூட்டுதல்.

இருவினையொப்பும் சத்தி நிபாதமும் எய்தினோர் பெறும் பயனை விரித்துரைப்பது,

"இருவினை நேரொப்பில் இன்னருட்சத்தி

குருவென வந்து குணம்பல நீக்கி