பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

603


தரும் அரன் ஞானத்தால் தன்செயல் அற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவன் ஆமே” (திருமந். 1527)

எனவரும் திருமந்திரச் செய்யுளாகும். 'புண்ணியம் பாவம் என்னும் இருவினைகளிலும் அவற்றின் பயன்களிலும் ஒட்ட உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின்கண் அவ்விரு வினைப் பயன்களும் சமம் என்னும் உணர்வு தோன்றிய நிலையில் இனிய திருவருளாகிய சத்தி குருவாக எழுந்தருளி உயிரின் பசு போத குணங்களை நீக்கித் தந்தருளும் சிவஞானத்தால் தன்செயல் அற்றால் அவ்வான்மா மும்மலங்களும்கெட்டுச் சிவமே ஆவன்' என்பது இத்திருப் பாடலின் பொருளாகும்.

இருவினை நேரொத்தல் - நன்றுந் தீதும் ஆகிய இரு வினைகளிலும் சமபுத்தியுண்டாதல். இருவினையொப்பாவது நல்வினை தீவினைகளிலும், அவற்றின் விளைவாகிய புண்ணிய பாவங்களிலும், அவற்றின் பயனாகிய இன்பத் துன்பங்களிலும் ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமின்றி ஆன்ம அறிவின் கண் ஒப்ப உவர்ப்பு நிகழ்தல். இன் அருட் சத்தி என்றது, முன்னர் உயிரின் ஆணவமலம் பக்குவமாதற் பொருட்டுச் சினம்பொருந்திய திரோதாயியாயிருந்த மறைப்பாற்றலாகிய சத்தியே உயிரின் மலம் கழலும் பக்குவத்தினை யுண்டாக்கியபின் இனிய அருட்சத்தியாயிற்று என்பதாம். குனம்பல நீக்கித் தரும் அரன்ஞானம் என்றது, உயிரின் தாழ்ந்த குணங்களைப் போக்கி மேலான சிவகுணம் பொருந்தும்படி சிவஞானத்தைத் திருவருட்சத்தியே தந்தருளும் என்பதாம். தன்செயலறுதலாவது, ஆன்ம போதம் கெடுதலால் நன்றெசெய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே எனத் தன்செயல் ஒழிந்து இறைவன் செயலில் அடங்கிநிற்றல். திரிமலம்- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள். சிவம் ஆதலாவது, ஆன்மா தன்பொருட்டன்மையழிந்து சிவம் ஒன்றாயே ஒழியாமலும் சிவத்தின்வேறாய் ஆன்மா தனித்து நில்லாமலும், பாலொடு அளாவிய நீரானது தன் உண்மை கெடாமல் பாலின் தன்மையதாய் அதனுடன் பிரிவறக்