பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கலந்து ஒன்றாதல் போன்று, ஆன்மா தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாதலாகும்.

உயிர் இருவினையொப்பும் மலபரிபாகமும் திருவருட் பதிவும் பெற்றுக் குருவருளால் தூய்மை பெற்றுச் சிவமேயாய்த் திகழும் இந்நிலையினை விளக்குவது,

"இருவினைச் செயல்கள் ஒப்பின்ஈசன்றன் சத்திதோயக்

குருவருள் பெற்று ஞானயோகத்தைக் குறுகி முன்னைத் திரிமலமறுத்துப்பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகிநாயகன்றன் பாதம்பெறுவது சுத்தமாகும்” (230)

எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும்

கடவுளுண்மையினை உடன்படாத புறச்சமயங்களின் பொருந்தாமையை அறிவுறுத்துவது, திருமந்திரத்திலுள்ள புறச்சமய துடனம் என்ற பகுதியாகும். உணர்வில் திருந்தாத புறச்சமயங்கள் ஆறும் கடவுளுண்மையினை யுனரும் உணர்வுடையன அல்ல என அறிவுறுத்துவது,

“ஆயத்துள் நின்ற அறுசமயங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்துள் உற்றுப்பதைக்கின்ற வாறே” (1530)

எனவரும் திருமந்திரப்பாடலாகும். "சமயத்தொகுதியுட் கூறப்பட்டு நின்ற புறச்சமயங்கள் ஆறும், உயிர்களின் உடம்பினுள்ளே எழுந்தருளிய முழுமுதற்பொருளாகிய கடவுளைக் கண்டுனரமாட்டா, அச்சமயங்களை மேற் கொண்டொழுகுவோர் மனைவிமக்கள் என்னும் பாசத்தில் அகப்பட்டு இவ்வுலகவாழ்க்கையில் இடர்ப்படுமாறு போலவே மறுமையிலும் பொய்ம்மையே பெருக்கும் பாச வலையுள் அகப்பட்டு வருந்துவர்” என்பது இப்பாடலின் பொருளாகும்.

ஆயம் கூட்டம்; சமயத்தொகுதி, மணிமேகலைக் காப்பியத்தில் உலோகாயதம், பெளத்தம், சாங்கியம்,