பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

605


நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்னும் ஆறும், சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவக வாதி, நிகண்டவாதி, பூதவாதி என்னும் ஏழும் மதக் கோட்பாடுகளாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பூதவாதி கூறுவன உலேகாயதத்துள் அடங்குதலின் பிற்கூறிய மதங்களும் ஆறேயாகும். இனி, திவாகரத்துள் வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பெளத்தம், உலோ காயதம் என்பன ஆறு சமயங்கள் எனக்குறிக்கப்பட்டன. இவை ஆறும் கடவுட் கொள்கையில்லாத சமயங்களாதலின் புறச்சமயங்கள் ஆயின. இவற்றை 'இருமுச்சமயத்தொரு பேய்த்தேர்’ எனக் குறித்தார் திருவாதவூரடிகள். காயம் - உடம்பு. 'உடம்புளே யுத்தமன் கோயில் கொண்டானென்று, உடம்பினையானிருந் தோம்புகின்றேனே" எனத் தாம் பெற்ற அருளனுபவத்தினை முன்னர்க் கூறியவாறே 'காயத்துள் நின்ற கடவுள்' என இங்கும் எடுத்துரைத்தார் சிவயோகியாராகிய திருமூலதேவர். காண்கிலா - கானும் ஆற்றலற்றனவாயின. கில் என்பது ஆற்றலுணர்த்தும் இடைநிலை தெய்வங் கொள்கையில்லாத அறுசமயத் தவரும் அச்சமயங்களிற் கூறப்படும் பொய்ம்மைக் கொள்கைகளை இன்பந்தரும் மெய்ம்மைக் கொள்கைகள் என்று நம்பித்தம் வாழ்நாட்களை வீணே கழித்தாற் போலவே மறுமையிலும் எல்லையற்ற துன்பக்குழியில் வீழ்ந்து இடர்ப்படுவர் என்பார், மனைமக்கள் பாசத்துள் உற்றுப்பதைக்கின்றவாறே மாயக்குழியில் விழுவர் என்றார். மாயக்குழி -பொய்ம்மைக் கொள்கையினால் விளைந்த துன்பக்குழியாகிய நிரயம்.

இறைவன் சமயங்கடந்த தனிமுதற்பொருள் என அறிவுறுத்துவது,

"ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப்பொருளும் அவனவன் தேறுமின் தேறித்தெளிமின் தெளிந்தபின் மாறுத லின்றி மனைபுக லாமே” (1533)

எனவரும் திருமந்திரமாகும். ஆறுசமயம் - உலோகாயதம் முதலாக முற்கூறப்பட்டி புறச்சமயங்கள் என்றது, அவற்றின்