பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தத்துவக் கொள்கைகளை விரித்துரைக்கும் நூல்களை. காணுதல் - கற்றுணர்ந்து அவற்றின் மெய்ம்மையினைக் கண்டு தெளிதல். தேறுதல் - ஆராய்தல். தெளிதல் - துணிதல், தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத்தேறல்’ என்பர் திருநாவுக்கரசர். மாறுதல் - பிறப்பு இறப்பில் அகப்பட்டு அலைதல். மாறுதலின்றிப் புகும் மனை என்றது, பேராவியற்கையாகிய வீட்டினை. களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி உயிரானது தனக்கு ஒப்பில்லா துயர்ந்த பேரின்பத்ததாய் ஒருநிலையில் அமைந்தே விடும் புக்கிலாக விளங்குவது வீடு பேறாகிய அந்நிலையென்பது உணர்த்துவார் மாறுதலின்றி மனைபுகலாமே என்று அருளிச் செய்தார் திருமூலர்.

கடவுளுண்மையினை யுடன்பட்டொழுகும் அகச் சமயங்கள் ஆறும் ஒருவன் என்னும் ஒப்ப்ற்ற பரம் பொருளை யடைதற்கு வகுத்த நெறிகளே என்பதும், இவ்வுண்மை யுணராது சமயத்தார் பலரும் தம்மிற் பிணங்கி மற்றைச் சமயங்களை இகழ்ந்துரைத்தல் அறிவுடைமையாகாது என்பதும் ஆகிய வுண்மைகளை அறிவுறுத்துவது,

“ஒன்றது பேருர் வழியாறதற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது வென்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத்தார்களே" (1558)

எனவரும் திருமந்திரமாகும்.

"அறிவுடைய நன்மக்கள் சென்று அடைதற்குரிய பெருமை வாய்ந்த ஊர் ஒன்றேயாகும். அவ்வூரை யடைதற்குரிய வழிகள் ஆறுள்ளன என்றாற்போன்று, கடவுளுண்மையைக் கூறும் ஆறு சமயங்களும் முழுமுதற் பொருள் ஒன்றையேயடைதற்குச் சாதனமாகவுள்ளன. ‘யாம் கூறும் இதுவே நன்று? பிறர்கூறும் இது தீது என்று இவ்வாறு தம்முட்பினங்கும் சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைத்து ஓடும் நாயையொத்தவராவர்” என்பது இத் திருமந்திரத்தின் பொருளாகும்.