பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

607


உட் சமயங்களிற் கூறப்படும் உண்மைகள் புறங் கூற்றாகிய வெற்றுரைகளால் மறுக்கப்படாதன என்பதும், அவற்றின் பொருளொருமையினையுணரவல்ல அறிவு மதுகையின்றிப் புறத் தோற்றத்தினைக் கண்டு மருண்டு வாதித்துப் பினங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஓடும் நாயினைப் போன்று, பிறர் கூறுவனவற்றை உள்ளவாறுணர்ந்து கொள்ளும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனிலவாகச் செய்வார்கள் என்பார், ‘குன்றுகுரைத்தெழும் நாயை யொத்தார்களே என அவர்தம் இழிவினைப் புலப்படுத்தி னார். ஞானமே திருமேனியாக வுடைய இறைவன், சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களிலெல்லாம் கூறப்பட்ட மெய்யுணர்வு முடிபுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச்சென்று முழுமுதற் பொருளாகிய இறைவனொரு வனையே நோக்கி முடிவன என அறிவுறுத்துவார், ஒன்று அது பேரூர், வழி ஆறு அதற்கு உள’ என்றார். இத்திரு மந்திரத்தை அடியொற்றியது,

“சுத்தவடிவியல்பாகவுடையசோதி

சொல்லிய ஆகமங்களெல்லாம் சூழப்போயும் ஒத்துமுடியுங்கூட ஓரிடத்தே ஒருபதிக்குப் பலநெறிகள் உளவானாற்போல் பித்தர்குண மதுபோல ஒருகாலுண்டாய்ப் பின்னொரு காலறிவின்றிப் பேதையோராய்க் கத்திடும் ஆன்மாக்களுரைக் கட்டிற்பட்டோர் கனகவரை குறித்துப் போய்க்கடற்கே வீழ்வார்”

(சித்தியார். பரபக்கம், 9)

எனவரும் சிவஞான சித்தியார் பாடலாகும்.

சமய பேதங்களையே மனத்துட்கொண்டு முரண் பாடுடையராய்ச் சமயப் பொதுமையினை நாடாதோர் பேரின் பநிலையாகிய வீட்டினை அடைதற்குத் தகுதி யில்லாதோர் என அறிவுறுத்துவது,

“இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி