பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

609


&&

கல்லிடைப்பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருளிதெனத் தொல்லையின் ஒன்றேயாகித்துறைதொறும் பரந்த

சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும்

போற்பரந்தவன்றே”

எனக் கம்பரும் கூறுவன மேற்குறித்த திருமந்திரப் பொருளை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். திருமூலர் அறிவுறுத்திய சமயப்பொது நெறியாகிய இதனை, 'ஒத்துச் சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்’ (திருவாசகம்) என்பர் திருவாதவூரடிகள்.

சிவனே குருவாய் வந்து நற்பொருளை அறிவுறுத்தல்

சைவ சித்தாந்த வுண்மைகளை உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர், அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துணர்தற் குரிய பொருள்களாகிய ஞானம் பெறும் சாதனங்களை உணர்த்துவது திருமந்திரப்பனுவலின் ஆறாந்தந்திரமாகும். இது, சிவகுரு தரிசனம் முதல் பக்குவன்’ என்பது முடியப் பதினான்கு உட்பிரிவுகளையுடையது. இதன்கண் சிவகுரு தரிசனம், திருவடிப்பேறு, ஞாதிரு ஞான ஞேயம், துறவு, தவம், அருளுடைமையின் ஞானம் வருதல், அவவேடம், தவவேடம், அபக்குவன், பக்குவன் என்ற தலைப்புக்களில் வைத்து மெய்யுணர்வுக்குரிய சாதனங்கள் விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

ஆன்மாக்கள் உய்திபெறுதல் வேண்டி இறைவன் தன்னடியார் திறத்தே நிகழச் செய்யும் தசகாரியமென்னும் அடியார் செய்கை பத்தும் ஆறாந் தந்திரமாகிய இதன் கண்ணும் ஏழு எட்டு ஒன்பது ஆகிய தந்திரங்களிலும் கூறப்படும் பொருள்களால் உணர்த்தப் பெறுகின்றன.

சிவகுரு தரிசனம் என்பது, காண்டற்கரிய கடவுளாகிய சிவபெருமான் தன்னை அன்பினாற் கசிந்துருகிப் போற்றும் அடியார் திறத்து வைத்த பெருங்கருனைத் திறத்தால் நம்மைப் போலும் மானிட

சை. சி. சா. வ. 39