பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

611


விரும்பியும் செயற்படும் நெறிகளாகிய மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் அறுவகை வழிகளையும் குற்றம் நீங்கச் சோதித்துத் தூய்மை செய்தல். சத்து என்பது, என்றும் ஒரு தன்மையினதாய் மாறாதுள்ள செம்பொருளாகிய சிவம் சுட்டுனர்வினாலே உணரப்படாத தூய்மையும் சிவஞானம் ஒன்றினாலே யுனர் தற்குரிய மெய்ம்மையும் உடைய பரம்பொருள். அசத்து என்பது உயிருனர்வாற் சுட்டியறியப்பட்டு அடிக்கடி நிலமாறுந் தன்மையதாகிய உலகத்தொகுதி. சதசத்து என்பது, சத்தினைச் சார்ந்த நிலையிற் சத்தின் தன்மையதாகவும் அசத்தினைச் சார்ந்த நிலையில் அசத்தின் தன்மையதாகவும் இவ்வாறு சார்ந்ததன் வண்னமாந்தன்மையினையுடைய ஆன்மா. 'சித்தம் இறையே என்றது, உயிர்க்குயிராயுள்ள பரம்பொருளை. சித்தம் இறையே சிவகுருவாமே என்றது, உயிர்களின் அகத்தே யெழுந்தருளிய சிவமே புறத்தே குருவாகவும் வெளிப்பட்டு அருளும் என்பதாம். இத் தொடர்ப் பொருளை அடியொற்றியமைந்ததே,

ն հ - - - - - -

அகத்துறுநோய்க் குள்ளினரன்றி அதனைச் சகத்தவரும் காண்பரோ தான்”

எனவரும் திருவருட்பயனாகும்.

உலகெலாங்கடந்தும் மன்னுயிர்கட்கு உயிராகிய அகத்துள் நின்றும் அருள்புரியும் சிவபரம்பொருளே உபதேச குருவாகவும் புறத்தே எழுந்தருளி வந்து இன்னருள் புரிவன் என அறிவுறுத்துவது,

“எல்லாவுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்

நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக் கொண்டிங்கே யளித்தலால் சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே” (1576)

எனவரும் திருமந்திரமாகும். "எல்லாவுலகங்களையுங் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் முதல்வன் இவ்வுலகின் இப்புறத்தானாக பரிபாகமுடைய நல்லோருள்ளத்திலே விளங்கித் தோன்றி மிக்க திருவருளைச் சுரத்தலாலும்