பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

53


இன்னுயிர் என இன்றியமையாதவராய் முறை பிறழாது ஆட்சிபுரிந்தனர். நாகரிகம் உருப்பெற்று வளர்தற்குரிய மருதநில மக்கள் தம் நாட்டு வேந்தனையே தெய்வமென எண்ணி அவனது ஆனை வழி ஒழுகினமையால் வேந்தன் மேய தீம்புனலுலகம்’ என்ற தொடரால் மருதநிலத்துக்குத் தெய்வமாவான் அந்நிலத்து வேந்தனே எனத் தொல்காப்பியனார் குறிப்பிடுவாராயினர். வேந்தனைக் காத்தற்கடவுளாகிய திருமாலாகக் கருதிப் போற்றும் மரபு தொல்காப்பியனார் காலத்திலேயே நிலைபெற்று வழங்கியுளது. இவ்வழிபாட்டு முறையினை,

"மாயோன் மேயமன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப்பூவை நிலை”

என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் உய்த்துணரவைத்தமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். ஆநிரையைக் காத்த நீலமேனிநெடியோனாகிய மாயவன் திருமேனியோடு உவமித்துக் காட்டிடத்து அலரும் காயாம்பூவினைப் புகழ்வது பூவைநிலையென்னுந் துறையாகும். மேற்குறித்த தொல்காப்பியத் தொடர்க்கு,

"மாயோனைட் பொருந்திய நிலைபெற்ற பெருஞ்சிறப்பினையுடைய கெடாத புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதல்” எனப் பொருள் கூறிய இளம்பூரண அடிகள், 'பூவை (காயம்பூ) மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தையொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவையைக் கண்டு கூறுதல், உன்னங்கண்டு கூறினாற் போல இதுவும் ஓர் வழக்கு” என விளக்கமும் தருவர். “இஃது உரையன்று என்பார் மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவை நிலையென்ப. வேறுகடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க, என்னை?

4. தொல்காப்பியம், பொருளதிகாரம், நூ. 3.