பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எல்லோரும் பிறவிப் பெருங்கடலினின்றும் நீங்கி உய்தி பெறுதல் வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு இங்கே எழுந்தருளி வந்து நன்ஞானத்தை வழங்குதலாலும் உபதேசித்தலைப் பொருந்திய நல்ல குரு துய சிவபெருமானே என்பது நன்கு தெளியப்படும்” என்பது இதன் பொருள். பரிபாகமுடைய நல்லோர்க்கு உயிர்க் குயிராய் உள்நின்றுணர்த்தும் சிவபெருமானே புறத்தே வெளிப்படாத் தோன்றிச் சிவஞானத்தை வழங்கும் குரு ஆவன் என்பதாம்.

'இல்லா முலைப்பாலும் கண்ணிரும் ஏந்திழையால்

நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் - இல்லா அருவாகித் தோன்றானை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று”

(சிவஞானபோதம், 8ஆம் குத்திரம், 2ஆம் அதிகரணம்)

எனவரும் மெய்கண்டார் வாய்மொழி இங்குச் சிந்தித்தற் குரியதாகும்.

திருமூலநாயனார் தம்பிறவி வேரறக் குருவின் திருவருளால் திருவடிப்பேறு எய்தினமை குறித்து மகிழ்ந்துரைப்பதாக அமைந்தது,

"திருவடிவைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடிவைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடிவிற்கண்ட கோனையெங்கோவைக் கருவழி மாற்றிடக் கண்டுகொண்டேனே'

என வரும் திருமந்திரமாகும். ‘அடியேனை அருட் கண்ணால் நோக்கி என்தலைமேல் தன்திருவடியைச் சூட்டி, எங்குமாய் நீக்கமற நிறைந்திருக்கும் தனது பெரிய வடிவினை அடியேன் உள்ளத்திற்கொள்ளும்படி தந்தருளிய பேர்நந்தியாகிய சிவபெருமானைக் குருவடிவில் எம்மனோர் காண எழுந்தருளிய எமது தலைவனை மீண்டும் கருவிற்செலுத்தும் பிறவி வழியினை மாற்றிப் பிறவாநெறியாகிய பெருநெறியிற் செல்லும் நிலையிற்