பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

615


'மாசில் வீணையும் எனவரும் திருக்குறுந்தொகையும் 'உராஅத்துணைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழ லாம் பதி (சிவஞானபோதம் சூத். 9) எனவரும் சிவஞான போதமும் இத்திருமந்திரப்பொருளை அடியொற்றி யமைந்துள்ளமை ஒப்பவைத்துனர்தற்குரியதாகும்.

ஞாதுருஞானஞேயம்

அறியும் உயிராகிய ஆன்மா, அறிதற்கருவியாகிய உயிரறிவு, அறிதற்குரிய பொருளாகிய முழுமுதற்கடவுள் என்னும் இம்மூன்றனுள் ஞா துரு (அறிவான்) ஆகிய தன்னையும், ஞானம் (அறிவு) ஆகிய கருவியினையும் மறந்து, ஞேயம் (அறியத்தகுபொருள்) ஆகிய இறையுணர்வில் ஏகனாகி ஒன்றுதலை உணர்த்துவது, ஞாதுருஞான ஞேயம் என்னும் இப்பகுதியாகும். ஞாதுரு - அறிவான்; ஆன்மா. ஞானம் - அறிவு, ஞேயம் அறியத் தகுபொருள் ஆகிய சிவம். ஆன்மா தற்போதம் இழந்து சிவஞானத்தால் இறை யுணர்வில் அழுந்தி நிற்றலை உணர்த்துவது இப்பகுதியாகும். ஆன்மா இம்முறையில் ஞேயத்து அழுந்துதலால் பாச நீக்கமும் சிவப்பேறும் உளவாம் என்பதனை உணர்த்துவது,

"நீங்காச் சிவானந்தளுேயத்தே நின்றிடப்

பாங்கான பாசம் படரா: படரினும் நீங்கா அமுத நிலைபெறலாமே” (1605)

எனவரும் திருமந்திரமாகும். "உயிர்களை விட்டு என்றும் நீங்காத நலம் வளர்பேரின்பத்தை நல்கும் சிவபரம் பொருளைத் தியானித்தலாகிய உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கவே, ஆன்மாவைச் சார்ந்துள்ள மலமாயை கன்மங்களாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்து பற்றமாட்டா; அவை ஒரோவழி முன்னை வாசனை.வயத்தால் மீண்டுவந்து பற்ற முற்படினும் அகங்காரமாகிய தற்போதத்தின்நீங்கி ஞ்ேய மாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையிற் பிறழாது நிற்கவே தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்கவிடாத சிவானந்தமாகிய பேரின் பத்தில் திளைத்து மகிழும் பேராவியற்கையாகிய வீட்டுநிலையினைப்பெறலாம்”