பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

617


விளையும் வண்ணம் சிவத்தில் அழுந்தி இன்புறுதலை. தூங்குதலாவது, மயக்க விகற்பங்களிற் பட்ாமல் தூங்காமல் தூங்குதல் என்றது. புண்ணிய பாவங்களைப் பயக்கும் விருப்பு வெறுப்புக்களாக வந்துபொருந்தும் கன்மமும், மண் முதல் மாயையீறாகக் காணப்படும் மாயையும், சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வையுண்டுபண்ணும் ஆணவமும் ஆகிய இம்மும்மலங்களும் சிவஞானிக்கு ஆகாதன என்றுண்ர்ந்து தற்போதம் தோன்றாதவாறு நீக்கிச் சிவஞானத்துள் அடங்கிச் சிவாதுபவம் சுவா நுபூதிகம் ஆமாறு ஞான நிலையில் உறைத்து நிற்றல். அருளோடு ஒன்றியுறங்குதலாகிய இதனியல்பினை,

"சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித்

துங்காதார் மனத்திருளை வாங்காதானை'

எனவும்,

“அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே

அறிவுதனை யருளினா னறியாதேயறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்களோடும்

கூடாதே வாடாதே குழைந்திருப்பையாகின்”

(சித்தியார், 382) எனவும் சான்றோர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

எல்லாமலங்களும் பற்றறத்துடைத்து மெய்யுணர்ந்து நிட்டை கூடினார்க்கு எடுத்தவுடம்பு நிற்குமளவும் நுகர் (பிராரத்த) வினையானது அவ்வுடம்பைப்பற்றி நின்று அவரை வாசனை வயத்தால் ஒரோவழி வந்து தாக்கும். அது சார்பாக விருப்பு வெறுப்புக்கள் உண்டாகும். அவையுண்டாகவே நிலமுதலாகிய பொருள் ஏகதேசப்படும். படவே அவற்றைச் சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வு மேற்பட்டு மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்திப் பிறவிக்கு வித்தாகும். இவ்வாறு தாம் நீங்கிய நிலையிலும் மீண்டு பற்றி வருத்தும் வகையில் உயிரை அணுகிப்படர்வன பாசமாம் என்பது தோன்றப் பாங்கானபாசம்’ என்றார். பாங்கு ஆண்பாசம் என்றது, அற்றம் பார்த்து மீண்டும் பற்றுதற்கு அனுகி நிற்கும் பாசம் என்னும் கருத்தினது. படர்தல் - மேலுர்ந்து அடர்தல்: