பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருமந்திரப் பாடல்கள், நல்லொழுக்க நெறியில் நின்று இறைவனை வழிபடுவார்பால் குற்றங்கள் நீங்க இன்றியமையாது இருத்தற்குரிய நற்பண்புகளை விளக்குவன. இத்தந்திரத்தின் இறுதியிலுள்ள இதோபதேசம் என்ற பகுதி, பொதுவாக உலகமக்கள் அனைவரும் சிறப்பாகச் சிவநெறிச் செல்வர்களும் அன்புடன் கடைப்பிடித்தொழுகி உய்தி பெறுதற்குரிய நல்லுரைகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றது.

இறைவனை யோகநெறி நின்று உணர்தற்கு நிலைக் களமாகிய ஆதாரங்கள் ஆறின் இயல்பினைக் கூறுவது,

'நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலங்கண்டாங்கே முடிந்து முதலிரண்டுங்

காலங்கண்டானடி கான்லு மாமே” (1704)

எனவரும் திருமந்திரமாகும். “நாலிதழ்த்தாமரைவடிவாகிய மூலாதாரமும், ஆறிதழ்த் தாமரை வடிவாகிய சுவாதிட்டான மும், பத்திதழ்த் தாமரை வடிவாகிய மணிபூரகமும், பன்னீரிதழ்த் தாமரைவடிவாகிய அநாகதமும். அவற்றின் மேல்நின்ற பதினாறிதழ்த் தாமரை வடிவாகிய விசுத்தியும் ஆகிய இவற்றின் மூலத்தைத் தரிசித்து அங்கங்கே முடிந்த நிலையெய்தி, இவற்றின் முதலாயுள்ள இரண்டிதழ்த் தாமரைவடிவாகிய ஆஞ்ஞையில் காலத்தை வென்றவனாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் கண்டு வழிபடும்பேறு உளதாம்” என்பது இதன் பொருளாகும்.

அண்டம் முழுவதும் சிவலிங்கவடிவாகக் கானும் காட்சி அண்டலிங்கம். மக்கள் உடம்பே சிவலிங்கமாதலை யுணர்த்துவது பிண்டலிங்கம். 'மானுடராக்கை வடிவு சிவலிங்கம் (1726) என்றார் திருமூலர். இறைவன் அருவுருவத் திருமேனியாகத் திகழ்வது, சதாசிவலிங்கம். அருள்நிலை பெற்ற ஆன்மாவே சிவலிங்கமாகக் கொண்டு வழிபடப் பெறுவது ஆத்மலிங்கம் ஆகும். ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந்தானே’ (1762) என்றார் திருமூலர். ஆன்மா

r

பெற்றுள்ள சிவஞானத்தையே சிவலிங்கமாகக் கொண்டு