பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

623


வழிபடப்பெறுவது, ஞானலிங்கம். எல்லாமாய் விளங்கும் பரசிவத்தை ஒரு தறியின் இடமாக எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்பெறுவது சிவலிங்கமாகும். இத்தகைய சிவலிங்கத் திருமேனியே ஒன்டான் வகையாகி அவரவர் பக்குவ நிலைக்கேற்ப நற்பயன் தந்தருளும் என்பது,

"மலர்ந்த அயன், மால், உருத்திரன், மகேசன்,

பலந்தரும் ஜம்முகன், பரவிந்து, நாதம், நலந்தரும் சத்தி சிவன் வடிவாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தியாமே” (1776)

எனவரும் திருமந்திரமாகும். “தாமரைமல்ரிடத்தே தோன்றிய பிரமன், திருமால், உருத்திரன், மகசேன், ஞானவன்மையினை நல்கும் ஐந்து திருமுகங்களையுடைய சதாசிவன், மேலான விந்து, நாதம், நலத்தினையருளும் சத்தி, சிவன் என்னுந் திருமேனியாகி உயிர்கட்கு முத்திப்பயனைநல்கும் இலிங்கத் திருமேனி பராசத்தியுடன் பிரிவின்றியுள்ள சிபெருமானது திருவுருவமாகும்” என்பது இதன் பொருளாகும்.

இங்குத் தனிமுதல்வனாகிய இறைவனுக்குச் சொல்லப்பட்ட ஒன்பது வடிவங்களையும்,

"சிவஞ்சத்திநாதம் விந்து சதாசிவன் திகழும்ாசன்

வந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றினொன்றாய்ப் பவந்தரும் அருவம்நால் இங்குருவம் நால் உபயம் ஒன்றாய் நவந்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்”

(சித்தியார் சுபக். 164)

எனவரும் பாடலில் அருவம், அருவுருவம், உருவம்" எனவகைப்படுத்துக் கூறுவர் அருணந்திசிவாசாரியார்.

மேற்குறித்த ஒன்பது வகையுள் சிவம் என்பது, புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் நிற்கும்நிலை. சத்தி என்பது, உயிர்களை நோக்கி நிற்கும் அருள்நிலை. நாதம் என்பது, சிவசத்தி உயிர்களின் பொருட்டு அருள்புரிய முன்னிற்குங்கால் ஞான சத்தி வடிவாய் நிற்கும் நிலை. பரநாதம் என்பதும் இதுவே. விந்து என்பது, மேற்குறித்த ஞானசத்தியால் தோற்றுவிக்கப்பெறும்