பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

627


பிறத்தல், வளர்தல், இளைப்பாறுதல் ஆகிய இவை உயிர்களின் தொழில்களாயினும், இவற்றை உயிர்களே செய்து கொள்ளும் ஆற்றல் அற்றன என்பதும் இத்தொழில்களின் நிகழ்வுக்கு இறைவனது திருவருளே ஏதுவாகும் என்பதும் புலப்பட அருளிற் பிறந்திட்டு .......... வளர்ந்திட்டு ........ மறைந்திட்டு’ என்றார். இத்திருமந்திரத்தில் இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் முறையே குறிக்கப் பெற்றிருத்தலும், இறுதியிற் கூறப்பட்ட அருளே யன்றி முன்னர்க் கூறப்பட்ட ஏனைய நான்கும் அருளின் நிமித்த மாகவே இங்குத் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளமையும் கானலாம். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

"ஏற்ற இவை அரனருளின் திருவிளையாட்டாக

இயம்புவர்கள், அணுக்கள் இடர்க்கடல்நின்றும் எடுத்தே

ஊற்றமிக அருள்புரிதல் ஏதுவாக

உரைசெய்வர், ஒடுக்கம் இளைப்பொழித்தல், மற்றைத்

தோற்றம் மலபாகம்வரக், காத்தல் போகந்

துய்ப்பித்தல், திரோதாயி நிறுத்தலாகும்,

போற்றலரும் அருள் அருளேயன்றி மற்றுப்

புகன்றவையும் அருளொழியப் புகலொணாதே (8)

எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளாகும். கன்மத்தினால் அலைப்புண்ணும் உயிர்களை இளைப்பாற்றுதலே அழித்தல், நீங்காதுள்ள ஆணவமலம் நீங்குதற்பொருட்டு மீளவும் தனுகரணபுவன போகங்களோடு கூட்டுதலே படைத்தல். கன்மங்களை நுகர்ந்து மலம் நீங்குதற்குரிய பக்குவம் உண்டாக்குதலே காத்தல். அந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கன்மங்களைத் தொலைப்பித்தற்காகக் குறிப்பிட்ட கால அளவுகளிலே அவற்றில் நிறுத்துதலே மறைப்பு. உயிர்களைப் பாசப்பிணிப்பகற்றித் திருவடியிலே கூட்டிக்கொள்ளுதலே அருளல்.

"போற்றி யெல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற் பாதம், போற்றி யெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள், போற்றியெல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள், போற்றி