பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மால் நான்முகனும் காணாத புண்டரிகம், போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்” (திருவெம்பாவை 20) என இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் திருவாசகத்திற் குறிக்கப்பெற்ற திறத்தை மதுரைச் சிவப்பிரகாசர் மேற் காட்டிய சிவப்பிரகாசவுரையில் எடுத்துக்காட்டி விளக்கி யுள்ளார். அருளால் என் நந்தி அகம்புகுந்தானே.” என்பதனை என்மனமே யொன்றிப்புக்கனன் போந்த சுவடில்லையே (4) என்ற தொடரில் அப்பரடிகள் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும்.

சிவபரம்பொருள் தன்னிற்பிரிவில்லாத பராசத்தியின் சொரூபமாகிய அருளொளியாய் ஞாயிறு திங்கள் முதலிய புறப்பொருள்களிலும் மன்னுயிர்களின் அகத்திலும் தோன்றும் சோதியாய்ச் சுடர்விட்டு விளங்கிப் புற விருளையும் அகவிருளையும் நீக்கி உயிர்களின் அறிவினை விளக்கி நிற்றலை விளக்குவது அருளொளி என்னும் பகுதியாகும். அருளொளியால் உயிர்கள் எய்தும் பயனை உணர்த்துவது,

“விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே" (1818)

எனவரும் திருமந்திரமாகும். "திருவருள் ஞானமாகிய விளக்கினையேற்றி எல்லையற்ற துயவெளியாகிய பரம் பொருளை யுணர்ந்து போற்றுவீராக. தூண்டாவிளக்காகிய அதன் சுடரொளியின் முன்னே உயிரை அநாதியே பற்றியுள்ள மலமாயை கன்மங்களாகிய துன்பங்கள் நில்லாது நீங்கும். உயிரின் அறிவினை விளக்கும் ஒளிவளர் விளக்காகிய அருளொளியினைத் தன் கண் பெற்றுடையவர்கள் அவ்வொளியினாற் சூழப்பெற்று விளங்கும் தூய ஞானச்சுடர் விளக்காக ஒன்றி ஒளியுடன் திகழ்வார்கள்” என்பது இதன் பொருளாகும்.

இத்திருமந்திரத்தின் முதலடியில் விளக்கு என்றது. சிவஞானத்தினை. ஏற்றுதல் - கொளுத்துதல்; உயிரது