பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஐந்து சுத்திசெய்து, ஆசனம் இட்டு மூர்த்தியை அதன்கண் எழுந்தருளச் செய்து மூர்த்திமானாகிய இறைவனைப் பாவனை செய்து அத்திருவுருவின் கண் ஆவாகித்து மெய்யன்புடன் அருச்சித்து விருப்புடன் சிவவேள்வியினைச் செய்து வழிபடுதலாகும். இப்பூசை புறப்பூசை (கிரியை), அகப்பூசை (ஞானம்) என இருவகைப்டும். பூசைப் பொருள்களைப் புறத்தே சேமித்துக் கொண்டு இறைவனை வழிபடுவது புறப்பூசை. இவற்றை மனத்தாலே படைத்துக் கொண்டு வழிபடுதல் அகப்பூசையாகும். அகப்பூசைக்குரிய அங்கங்களை உணர்த்துவது,

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலாயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே’ (1823)

என வரும் திருமந்திரமாகும். “பேரருள்வள்ளலாகிய இறைவனுக்கு ஊனுடம்பே கோயில் வளாகமாகிய ஆலயமாகும். உள்ளமே இறைவன் வீற்றிருந்தருளும் கருப்ப இல்லாகிய பெருங்கோயிலாகும். அவ்வாலயத்தின் கோபுர வாசலாகத் திகழ்வது வாயாகும். இறைவனைப் பூசிக்கும் முறையினைத் தெளிவாகவுனர்ந்த சிவஞானிகட்கு அவர்தம் ஆன்மாவே இறைவனை ஆவாகித்துப் பூசித்தற்கேற்ற சிவலிங்கத் திருமேனியாகும். வஞ்சனையை விளைக்கும் ஐம்புலன்களும் அடங்கிய நிலையே அவ்வழிபாட்டிற்குரிய உள்ளொளியினைத் தரும் தூண்டாத மனிவிளக்காகும்” என்பது இதன்பொருளாகும். இவ்வகப்பூசையின் இயல்பினை விளக்குவது,

“காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணியிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீரமையஆட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.” (4)

எனவரும் திருநேரிசையாகும்.

சிவஞானத்தை உபதேசித்தருளிய சிவகுருவைப் பூசித்தலின் சிறப்பினையுணர்த்துவது குருபூசை என்னும்