பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

55


“கறவை காவலன் நிறனொடு பொரீஇப்

புறவலர் பூவைப் பூப்புகழ்ந்தன்று”

என ஐயனாரிதனார் இத்துறைக்கு விளக்கம் கூறியுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுனரத்தகுவதாகும். தொல்காப்பியத் துக்குட் பின் தோன்றிய கடைச் சங்கத் தொகை நூல்களில் முக்கண்னன், முருகன் முதலிய எல்லாத் தெய்வங்களையும் மன்னனுக்கு உவமையாக எடுத்துரைத்துச் சிறப்பிக்கும் வழக்கம் உளதா தலையுணர்ந்த இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் மாயோனை மன்னனுக்கு உவமித்தலேயன்றி ஏனைத் தெய்வங்களை அரசனுக்கு உவமித்தலும் பூவைநிலையேயாகும் என இலக்கியங் கண்டதற்கேற்ப இலக்கணமும் அமைத்துக் கொண்டார்கள். “மாயோன் நிறம் போலும் பூவைப்பூநிறம் என்று பொருவுதல் பூவைநிலையென்று கொண்டால் ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல் வேண்டும். ஆசிரியர் அவை கூறாமையின் அது புலனெறிவழக்க மன்மையுனர்க” என நச்சினார்க்கினியர் ஐயனாரிதனார் பூவைநிலையென்னுந்துறைக்குத் தந்த விளக்கம் குறையுடையதாதலை எடுத்துக்காட்டி மறுத்துள்ளமையும் இங்குக் கருதுதற்குரியதாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில் சொற்களை உயர்தினைச் சொல் அஃறிணைச் சொல் என இருதினையாகப் பகுத்துக் கூறுகின்றார். அங்ங்ணம் பகுத்துரைக்கப்படும் இருதினை ஐம்பால்களுள் இன்னபால் என விளங்காதன சிலவற்றை யெடுத்துக் கூறி அவற்றை உயர்தினையுள் அடக்குவதாக அமைந்தது,

"காலம் உலகம் உயிரே உடம்பே

பால்வரை தெய்வம் வினையே பூதம்

ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்

ஆயீரைந் தொடு பிறவு மன்ன

ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்