பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தோன்றத் தன்னிலையன்னம் என்றும் மடவன்னம் என்றும் அடைபுணர்த்து ஒதினார். தன்னிலையன்னம் என்றது, எக்காலத்தும் தன்னியல்பில் மாறாதுள்ள மெய்ப்பொருளா யுள்ள சிவபரம்-பொருளை மடவன்னம் என்றது, அநாதியே ஆணவமலத்தால் மறைக்கப்பட்ட அறிவினதாகிய ஆன்மாவை, துன்னுதல் பொருளால் வேறுபடினும் கலப்பினால் ஒன்றாய் நெருங்குதல், பேறு என்பது, வீடு பேறாகிய இன்பத்தினை.

"பிரியாநண்பினையுடைய இருபறவைகள் ஒரே கிளையில் அமர்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று இனிய பழத்தைத் துய்க்கின்றது. மற்றது உண்ணாது பார்த்துக் கொண்டிருக்கிறது” (இருக்கு வேதம் 1.164.20) என்னும் மறைமொழிப்பொருள் இத்திருமந்திரத்தோடு ஒப்புநோக்கற் பாலதாகும். இதனால் என்றும் மாறாத இயல்பினது சிவம் என்பதும் அது மன்னுயிர்க்குச் சார்பாயுள்ளது என்பதும் அதன் சார்பின்றி அறியாமையையுடைய உயிர் பேரின்ப வாழ்வினைப் பெறுதல் இயலாதென்பதும் உணர்த்தப் பெற்றன.

கூடாவொழுக்கம் என்ற தலைப்பில் தவத்தொடு பொருந்தாத தீயவொழுக்கத்தை நீக்குதற்குரிய உபாயம் கூறுவதாக அமைந்தது,

“கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்

கண்காணி யில்லா இடமில்லை காணுங்கால் கண்காணியாகக் கலந்தெங்கு நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந்தாரே” (2067)

எனவரும் திருமந்திரமாகும். "தம்மைக் கண்காணிக்கும் தலைவராவார் இவ்விடத்து எவரும் இல்லையென்று எண்ணிக் கூடாவொழுக்கத்தினராய்க் கள்ளச்செயல்கள் பலவற்றையும் செய்வார் உண்மையறியாதார். ஆராய்ந்து நோக்குங்கால் நல்லனவும் தீயனவுமாக நாம் செய்யுஞ் செயல்களை உடனிருந்து கூர்ந்து நோக்கும் இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. உயிர்கள் செய்யும் செயல்களைக் கண்காணித்து முறைவழங்கும் தலைவனாக