பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


களையும் சிறந்த வழிமுறைகளையும் இனிய மொழிகளால் அறிவுறுத்துவனவாகும். “பிறப்புவகையாகிய குலமும் ஒன்றே. வழிபடுதற்குரிய பரம்பொருளாகிய இறைவனும் ஒருவனே. ஆதலால் எல்லாவுயிர்கட்கும் நலம் பயக்கும் எண்ணங் களையே எண்ணுங்கள். அவ்வாறு எண்ணுவீராயின் நமனால்வரும் சிறப்புத்துன்பம் நுமக்கில்லை. நானமின்றிப் பலவிடத்துஞ்சென்று பலரையும் நாடியடைதற்குரிய நற்கதி பிறிதொன்றுமில்லை. எனவே நீவிர் (ஒழுக்கநெறியிற் பிறழாது) நின்று நுமது உள்ளத்தே இறைவனை நிலைபெற நினைந்து உய்திபெறுவீராக’ என உலகினர்க்கு அறிவுறுத்துவ தாக அமைந்தது.

“ஒன்றே குலனும் ஒருவன்ே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதியில்லை துஞ்சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்துய்மினே” (2104)

எனவரும் திருமந்திரமாகும். இத்திருப்பாடல், தெய்வங் கொள்கையுடைய எல்லாச் சமயத்தார்க்கும் ஏற்றபொதுமை வாய்ந்த உபதேசமாக அமைந்துள்ளமை குறிக்கத் தகுவதாகும்.

குலம் - உயர்தினை மாந்தரின் பிறப்புப்பற்றிய பிரிப்பு. வினை வயத்தால் உளவாம் பிறப்பு மக்களிடையே பல்வேறு இனமாகப் பிரித்துப் பேசப்படினும் உயிர் நிற்றற்குரிய உடம்பு என்னும் பொதுமையால் நோக்கும்பொழுது பிறப்பு வகைபற்றிய சிறப்பு எதுவும் இல்லையென்பார் ‘ஒன்றே குலமும்’ என்றார். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என வரும் திருக்குறள் இத்தொடரில் நிலைபெற்றுள்ளது. ‘எல்லாவுயிர்களும் ஓரினமே. அவ்வுயிர்கட்குத் தலைவனாக நின்று அருள்புரியும் இறைவனும் ஒருவனே என்னும் இவ்வுண்மையினை உள்ளவாறுணர்ந்தோர் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் ஆன்மநேய ஒருமைப் பாடுடைய ராய் எவ்வுயிர்க்கும் நன்றே நினைந்து உய்திபெறும் நல்லியல்பினராவராதலின் அன்னோர்க்கு இறத்தல் துன்பம் என்றும் நேராது என்பார், நன்றே நினைமின் நமன் இல்லை’ என்றார். நலம்பெற விரும்பியவர்கள் நாணமின்றிப்