பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சார்ந்தொழுகுவாரது குளிரை நீக்கி நலஞ்செய்தும் தன்னைவிட்டு விலகினார்க்குப் பயன்தராதும் அமைதல் போன்று, தீவண்ணனாகிய இறைவனும் அன்பினால் தன்னை அகலாதொழுகுவார்க்கு நடுக்கம் அகற்றி நலம்புரிதலும் விலகியொழுகுவார்க்குப் பிறவிப்பினியுட்பட்டு வருந்தப் பயன்தராதொழிதலும் ஆகிய இருநிலைமையும் உடையன் என்பார், தழல் வண்ணன் சார்ந்தவர்க்கு இன்பங்கொடுக்கும், பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவிகொடுத்திடும்’ என்றார். ‘சார்ந்தவர்க்கின்பங்கள் தழைக்கும் வண்ணம். நேர்ந்தவன்’ (1.113.5) எனவும், 'தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானை' (2.4.11) எனவும், 'சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவானலன் (4.11.6) எனவும் வரும் அருளிச்செயல்கள் இத்திருமந்திரத்தின் சொற்பொருள்களை அடியொற்றியமைந்தனவாகும்.

இறைவன் அருள்வழி நிற்பார்க்கு இன்பமும், அங்ங்னம் நில்லாது தாம் விரும்பியவழி ஒழுகுவார்க்குத் துன்பமும் செய்தல் அருளாளனாகிய இறைவனுக்கு நடுவுநிலைமையன்று என்பாரை நோக்கி, அவர்தம் மொழியை உடன்பட்டே அமைதி கூறுவதாய்ச் சார்ந்தாரைக் காத்தல் தலைவர்கடன் என்னும் பழமொழியை எடுத்துக்காட்டி இச்செயல் உயிர்களைத் திருத்திப் பணிகொள்ளும் இறைவனுக்கு நடுவன்மையும் அன்று என வலியுறுத்துவது,

"சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்

சார்ந்தாரைக் காத்தும் சலிமிலனாய்ச் - சார்ந்தடியார் தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முற் செய்வினையும் ஆங்கு”

(சிவஞானபோதம் சூத். 10, வெண்பா. 44) எனவரும் சிவஞானபோத உதாரணவெண்பாவாகும். இது மேற்காட்டிய திருமந்திரத்தைத் தழுவியமைந்ததாகும்.

எட்டாந்தந்திரம்

திருமந்திரத்தின் எட்டாந்தந்திரம், உடலிற்