பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'பசுக்கள் பலவண்ணம், பால் ஒருவண்ணம்’ என்றார். பாலின் நிறம் வெண்மை, இங்குச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையினைக் குறிப்பால் உணர்த்திற்று. உயிர்கள் பல, இறைவன் ஒருவனே என்பது உணர்த்துவார், பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் என்றார். கோல் என்றது, உயிர்களை அவை செய்த இருவினைகளின் வழி மறைந்து நின்று செலுத்தும் சினமருவு திரோதாயியாகிய சத்தியினை, கோலைப் போடுதலாவது, அக்கோலினால் உயிர்களின் மலங்கழலும் பக்குவம் எய்தியபின், முன்னர் வெகுண்டு வினைப்பயன் அருத்திய திரோதான சத்தியே தன் சினந் தவிர்ந்து நலம்புரியும் அருட்சத்தியாக மாறுதல் அடைதல். அத்திருவருட்சத்தி பதிந்தபின் உயிர்கள் யாவும் தம் அச்சத்திற்கு ஏதுவாகிய பாசப் பிணிப்பின் நீங்கிச் சிவஞானமாகிய தெளிவு பெற்றுச் சிவபரம்பொருளை அன்பினால் அணுகி இன்புறும் நிலையினவாகும் என்பார், 'பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடிற், பசுக்கள் தலைவன்ைப் பற்றிவிடாவே' என்றார். சாத்தனூரில் ஆனிரை மேய்த்த மூலன் என்னும் ஆயன்பாற் பசுக்கள் கொண்ட அன்பினை நேரிற்கண்ட சிவயோகியார், தாம் கண்ட காட்சியினை உவமையாகக் கொண்டு பசுபதியாகிய இறைவன்பால் ஆன்மாக்கள் கொள்ளும் நேயத்தினையும் எடுத்துக்காட்டிய திறம் உணர்ந்து போற்றத்தகுவதாகும்.

ஆன்மா தோற்றமில் காலமாக ஆணவமலத்தால் மறைக்கப்பட்டுத் தனக்குரிய விழைவு அறிவு செயல் என்னும் மூவகை ஆற்றல்களும் வெளிப்படுத்தற்குரிய வாய்ப்பின்றித் தனித்துக் கிடந்த இருள்நிலை கேவலாவத்தை எனப்படும். இவ் அவத்தையில் இயல்பினை உணர்த்துவது,

爱葵

அறிவிலன் அமூர்த்தன் அராகாதி சேரான் குறியொன்றிலான்நித்தன் கூடான்கலாதி செறியுஞ் செயலில்லோன் திண்கர்த்தா அல்லோன் கிறியின் மலன் வியாபி கேவலத்தோனே” (2247)

எனவரும் திருமந்திரமாகும். “கேவல நிலையினனாகிய ஆன்மா (அந்தக்கரணம் முதலிய கருவிகளைப் பெறாமையால்) அறியுந்திறமில்லாதான்; தனக்கென வடிவ