பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முன்கொள்கை இல்லாதவன்; தோற்றக்கேடுகள் முன் இல்லாதவன் ஏகதேசி யாதல் முன் இல்லாதவன் கேவல அவத்தையில் ஆணவ மலத்தோடும் மட்டுமே கூடியுள்ளவன் என்பன கேவல நிலையில் ஆன்மாவின் இயல்புகளாகக் கூறப்பட்டன.

ஆன்மா மாயையின் காரியப்பொருள்களாகிய உடல் கருவி உலகு, நுகர்பொருள் ஆகியவற்றைப் பெற்றுள்ள இவ்வுலகியல்நிலை சகலாவத்தை எனப்படும், இதன் இயல்பினைக் கூறுவது,

క్షక్ష

உருவுற்றுப்போகமே போக்கியத்துற்று மருவுற்றுப்பூத மனாதியான் மன்னி வருமச் செயல்பற்றிச் சத்தாதிவைகிக் கருவுற்றிடுஞ் சீவன் காணுஞ் சகலத்தே (2261)

எனவரும் திருமந்திரமாகும்.

‘மாயாகாரியமான உடம்பினைப் பொருந்தி உடுத்த வுடம்பிற்குரிய போக போக்கியங்களை நுகர்ந்து பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அகக்கருவியோடு நிலைத்து அவற்றால் வருகின்ற செயல்களைப் பொருந்தி ஓசை முதலிய விடயங்களில் விரும்பித்தங்கிக் கருவுற்றுப் பிறந்தவுயிர் காணப்பெறும் சகலாவத்தையினையுடையதாகும்” என்பது இதன்பொருளாகும்.

உயிர், உடல் கருவி முதலியவற்றைப் பெற்று உலகிற் பிறந்து போகம் நுகர்ந்து வரும் இவ்வுலகியல் வாழ்வு சகலாவத்தை என்பதாம். இத்திருமந்திரச் சொல்லையும் பொருளையும் அடியொற்றியது,

“உருவினைக் கொண்டுபோகபோக்கியத் துன்னல் செப்பல்

வருசெயல்மருவிச் சத்தமாதியாம் விடயந்தன்னிற்

புரிவதுஞ் செய்திங்கெல்லாயோனியும் புக்குழன்று

திரிதரும் சகலமான அவத்தையிற் சீவன்சென்றே” (230)

எனவரும் சிவஞான சித்தியாராகும்.

“உருவினைக் கொண்டும் நுகர்ச்சிப் பகுதியாகிய