பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

649


கான வல்லார்க்கு அசத்தாகிய பிரபஞ்சத்தின் தோற்றம் கட்புலனாகாது என்பது கருத்து.

"பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர்

பதார்த்தங்கள் பாரார் ...............................

சீவன்முத்தர் சிவமே கண்டிருப்பர்” (சித்தியார்)

என்றார் அருணந்தி சிவனாரும்.

இறைவனது உடைமைப் பொருளாகிய தம் (ஆன்மாவின்) இயல்பினை உணர்ந்து தம்மை அடிமையாக வுடைய இறைவனையும் உள்ளவாறு உணர்பவர்களே சித்தாந்த சைவர்களாவர் என்பது, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் (சிவஞானபோதம் அவை யடக்கம்) எனவரும் மெய்கண்டார் வாய்மொழியால் இனிது புலனாகும். ஆன்மா தன்னையறிதலால் வரும் பயன் உணர்த்துவது,

“தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை யறியாமல் தானே கெடுகின்றான் தன்னை யறியும் அறிவை யறிந்தபின் தன்னையே யர்ச்சிக்கத்தானிருந்தானே” (2355)

எனவரும் திருமந்திரமாகும்.

“ஆன்மா தனது இயல்பை உள்ளவாறு அறிந்து கொள்ளுதலால் தனக்கு வரக்கூடியது ஒரு துன்பமும் இல்லை. ஆன்மா தன்னியல்பினை உள்ளவாறு உணராமையினாலேயே தானே (வாழ்க்கைப் பயனையிழந்து வீனே) கெடுகின்றான். தனதியல்பினை உள்ளவாறு உணர்தற்கு ஏதுவாகிய சிவஞானத்தைத் தந்தருளும் இறைவனை அறிந்து பின்பு தன் தலைவனாகிய இறைவனையே பூசிக்கத் தான் அவனுடன் பிரிப்பின்றி யிருத்தலாகிய பேரின்ப நிலையைப் பெறுகின்றான்” என்பது இதன் பொருளாகும்.

தன்னை அறிதலாவது, ஆன்மாவாகிய தன்னை இறைவனுக்கு அடிமையென்று அறிதல், தனக்கு -