பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

57


ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டுப் பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியுமாகிய தன்மையை வரைந்து நிற்கும் பரம்பொருள். வினையென்பது ஊழ். பூதம் என்பது நிலம் நீர் தீ வளி ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்கள் என்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது; அச்சொல்லினான் இயன்ற மந்திரம் விட முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று” என்பது தெய்வச்சிலையார் கூறும் பொருள் விளக்கமாகும்.

இவ்வுரையினைக் கூர்ந்து நோக்குங்கால் சாங்கியர் கூறும் இருபத்தைந்து தத்துவங்களுக்கு மேலாகச் சைவசித்தாந்தங் கூறும் தத்துவங்களிற் சில காலமுலகம்’ எனத் தொடங்கும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் இடம்பெற்றுள்ளமை காணலாம். உலகத் தொகுதிக்கு முதற் காரணமாய் என்றும் நிலைபேறுடையதாய் அறிவில்லாத சடப்பொருளாய் வைப்பாற்றலாய் இறைவனது விரிவுக்குள் அடங்கியதாய் உள்பொருளாய் அருவாய் உள்ளது மாயை. மா என்பது ஒடுங்குதல்; யா என்பதுவருதல். இவ்வுலகம் ஒடுங்குதற்கும் மீளத் தோன்றுதற்கும் நிலைக்களமாயுள்ள பொருள் மாயையாதலின் அது மாயா என்னும் வடமொழிப்பெயராற் குறிக்கப்பட்டு ஆவீறு ஐயாதல் என்னும் தமிழிலக்கண மரபின்படி மாயை எனத் திரிந்து வழங்குவதாயிற்று. மாயா என்பதனைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு மாய் ஆ எனப் பிரித்து இவ்வுலகம் மாய்தற்கும் (ஒடுங்குதற்கும்) ஆதற்கும் (மீளத் தோன்றுதற்கும்) நிலைக்களமானது எனப் பொருள் விளக்கந் தருதலும் உண்டு.

உயிரறிவிற்குப் புலப்படும் பொருளின் புடை பெயர்ச்சிகள் யாவும் காலம் என்னும் அருவப் பொருளின் வரையறைக்கு உட்பட்டு நிகழ்தலின் காலம் என்பது ஒரு தத்துவமாக வழங்கப்பெற்று வருகிறது. காலம் என்பது