பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும். “சித்தாந்தச் செந்நெறியிலே இவ்வொரு பிறவியியே சீவன் முத்தி கைவரப்பெறுதலால் அந்நெறியிற் பிறழாது நின்றொழுக வல்லவர் சீவன் முத்தி கைவரப்பெற்றவராவர். மெய்ந்நெறி யாகிய சைவ சித்தாந்தமும் உலகியல் நெறியாகிய வேதாந்த மும் ஆகிய இவற்றிற் கூறப்படுவன சிறப்பும் பொதுவுமாகிய செம்பொருளாதலால் அவ்விருவகை நெறியும் சிவனது சிறப்பியல்பும் பொதுவியல்புமாகிய உண்மைகளை விளக்கிக் காட்டுவன” என்பது இதன் பொருளாகும்.

சித்தாந்தம் என்பது சிவாகமங்களின் முடிந்த முடிபு. சீவன் முத்தியாவது, உயிரானது உடம்பு முதலிய மாயேயத் தோடு கூடிய நிலையிலும் அவற்றிற் பற்றுச் சிறிதுமின்றிச் சிவத்தோடு அழுந்தி நிற்றல். சித்தித்தல் - எண்ணியபடியே கைவரப்பெறுதல், செம்பொருள் - முரண்படாத இயை புடைய பொருள். சித்தாந்தம் வேதாந்தம் சிவனைக்காட்டும் எனத் திருமூலர் இருவகை நெறிகளையும் சிறப்பாக எடுத்துரைத்தலால், தென்னாட்டில் உருவாகி வழங்கிய சித்தாந்தமும் வடநாட்டில் உருவாகி வழங்கிய வேதாந்தமும் பொருளொருமையால் ஒத்த தத்துவமுடிவுகளாகக் கருதப்படும் நிலை திருமூலநாயனார் காலத்திற்கு முன்னரேயே தமிழகத்தில் உருவாகியதென்பது நன்கு புலனாகும். ஆயினும் வேதாந்தத்தினும் சித்தாந்தமே. உயர்வுடையது என்னும் கொள்கை தமிழகத்தில் வேரூன்றி யிருந்ததென்பது, ‘வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும்’ என்ற தொடரில் மிக்க சித்தாந்தமும்’ எனத் திருமூலர் அடைபுணர்த்து ஒதுதலாலும் இத்திருமந்திரத் தொடரை யுளங்கொண்டு, ‘வேதநெறி தழைத்தோங்கமிகு சைவத்துறை விளங்க’ எனச் சேக்கிழார் பெருமான் ‘மிகு சைவத்துறை' எனச் சிறப்பித்துக் கூறுதலாலும் உய்த்துணரப்படும்.

வேதம் ஆகமம் என இறைவன் அருளிய மெய்ந் நூல்கள் முறையே உலகியல் நூலாகிய பொதுநூல் எனவும் சைவம் ஆகிய சிறப்புநூல் எனவும் இருவகைப்பட உள்ளன. இறைவன் வாய்மொழிகளாகிய இவ்விருவகை நூல்களும் இருவேறு முடியின ஆதலால் இவை தம்முள் வேறுபா