பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

653


டுடையன என்பர் சிலர். இறைவனருள் பெற்ற பெரியோர்க்கு இவ்விரு நூற்பொருள்களும் ஒரு தன்மையனவே என அமைதி கூறும் நிலையில் திருமூலர் அருளியது,

"வேதமோ டாகமம் பொய்யாம் இறைவனுால்

ஒதும் பொதுவுஞ் சிறப்பு மென்றுள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதமதென்பர் பெரியோர்க் கபேதமே” (2397)

என்னும் திருமந்திரமாகும். இத்திருமந்திரப் பொருளை அடியொற்றி,

“உலகியல் வேதநூலொழுக்க மென்பதும்

நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்”

(பெரிய சம்பந்தர்)

எனவும்,

“வேதப்பயனாஞ் சைவமும் போல்” (பெரிய சண்டீசர்)

எனவும் சேக்கிழார் கூறும் வாய்மொழிகள் இங்கு உளங்கொளத் தக்கனவாகும். வேதங்களே பிரமான நூல்கள் எனக்கொண்டு சிவாகமங்களைப் பிரமானமாக ஏற்றுக் கொள்ளாதாரும் சிவாகமமே பிரமான நூல்கள் எனக்கொண்டு வேதங்களைப் பிரமானநூல்களாக ஏற்றுக் கொள்ளாதாரும் ஆகிய வேதவாதிகளும் ஆகமவாதிகளும் தம்முன் முரனின்றி வேதம் பொதுவும் ஆகமம் சிறப்பும் என உடன்பட்டு வைதிக சைவராய் வாழ்தற்குரிய ஒற்றுமை யுணர்வைத் தமிழகத்தில் நிலைநாட்டிய பெருமை திருமூல நாயனார்க்குரிய தனிச்சிறப்பாகும்.

சிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளிவந்து அருள் நோக்கமாகிய தீக்கை செய்து இப்பிறப்பிலேயே சீவன்முத்த ராகச் செய்து ஆட்கொண்டு மும்மல அழுக்கைக் கழுவி ஞானக்கடலில் மூழ்கச்செய்து சிவானந்தம் மேலிடச் செய்து, மேல்வரும் பிறவியையொழித்து முத்தி வடிவாகிய திருவடிக் கீழ்வைத்தருள்வன் என்பது சைவ சித்தாந்தம் கூறும் மெய்யுணர்வுக் கொள்கையாகும். இதனைச்