பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“சித்தாந்தத்தே சீவன் முத்தி சித்தித்தலால்

± - - - κ. g & 。势穷 சித்தாந்தத் தேநிற்போர் முத்தி சித்தித்தவர்

(திருமந். 2394)

என வரும் திருமந்திரத்தில் திருமூலர் தெளிவாகக் குறித்துள்ளார். இதனை,

“சித்தாந்தத் தேசிவன்றன்றிருக்கடைக்கண் சேர்த்திச்

செனனமொன்றி லேசீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி

மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பனென்று

மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்

பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி’

(சித்தி. சுபக். 268)

என வரும் திருவிருத்தத்தில் அருணந்தி சிவனார் எடுத்தாண்டுள்ளமை கானலாம்.

திருவடி வைப்பாம் ஞான தீக்கையாமாறு உணர்த்துவது, அடித்தலையறியுந்திறங் கூறல் என்ற பகுதியாகும். கால், தாள் என்னுஞ்சொற்கள் இறைவனது திருவருளாகிய திருவடியைக் குறிப்பன. தலை என்பது அத்திருவருளால் ஆன்மா பெறும் சிவஞானத்தைக் குறிப்பதாகும். இந்நுட்பம்.

“காலுந் தலையும் அறியார் கலதிகள்

காலந்தச் சத்தியருளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே” (2425)

எனவரும் திருமந்திரத்தால் விரித்துரைக்கப்பெற்றது.

‘தாள்தந் தளிக்குந் தலைவனே சற்குரு

தள்ள்தந்து தன்னையறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவாதிதச் சதாசிவன் தாள்தந்து பாசந் தணிக்குவமன் சத்தே' (2049)