பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

655


எனவரும் திருமந்திரமும் இங்கு நினைத்தற்குரியதாகும்.

“தருவாயெனக்குன் திருவடிக்கீழொர் தலைமறைவே”

என்பது அப்பர் அருள்மொழியாகும்.

இறைவனது திருவருள் உள்நின்று உணர்த்தினால் தான் இறைவனை நினைந்து போற்றுதல் இயலும். அம்முதல்வனது திருவருட் குறிப்பின்றி உயிர்கள் இறைவனை நினைதல் இயலாது என அறிவுறுத்துவது,

“சிந்தையினுள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகிலா னாகில் எந்தையை யானும் அறியகி லேனே' (2428)

எனவரும் திருமந்திரமாகும். இதன்பொருளை அடியொற்றி யமைந்தன

“என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்

தன்னை நானும் பிரானென் றறிந்திலேன் என்னைத் தன்னடி யானென்றறிதலும் தன்னை நானும் பிரானென்றறிந்தேனே'

எனவரும் திருக்குறுந்தொகையும்,

“என்னை நினைந்தடிமை கொண்டென்னிடர் கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான்”

எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் அனுபவமொழியும்

ஆகும்.

மனத்தகத்தானாகிய இறைவனைத் தலைமேலானாக வைத்து வணங்குமாறு உணர்த்துவது,

&

'ஊறும் அருவி உயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப்பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.” (2335)