பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் திருமந்திரமாகும். “உள்ளிருந்து ஊற்றெடுத்துப் பெருகும் உயர்ந்த மலையின் உச்சியின்மேல், நதியில்லாமலே வெள்ளம் பெருகும் அரிய தடாகம் ஒன்றுளது. அத் தடாகத்தினுள்ளே சேற்றின் தொடர்பின்றிப் பூக்கும் செழித்த கொடியிலுள்ள தாமரைப் பூவையன்றிக் கட்டமைந்த சடையினையுடைய எம்பெருமான் வேறுமலர்களை விரும்பியனிய மாட்டான்” என்பது இதன்பொருளாகும்.

இப்பாடலில், ஊறும் அருவி உயர்வரையுச்சி என்றது, புருவநடுவாகிய ஆஞ்ஞைத் தானத்தினை. அதன்மேல் குளம் என்றது உச்சிக்குமேல் பன்னிரண்டங்குல நிலையில் உள்ளதெனப்படும் மீதானத்தினை. சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூ என்றது சுழுமுனை முடிவி லுள்ள ஆயிரவிதழ்த் தாமரையை தலைமேலுள்ள தெனப்படும் மீதானமாகிய அரிய குளத்திலே மலர்ந்த தாமரப்பூவே இறைவன் விரும்பியணியும் நறும் பூவாகும் என்பதாம். மனத்தகத்தான் தலைமேலான்’ எனவும் 'அப்பூதி, குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய் எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் இங்குஒப்புநோக்கியுணரத்தக்கன.

வினைநீக்கமே மெயய்யுணர்வு பெறுதற்கும் வீடு பேற்றிற்கும் வழிசெய்யும் என அறிவுறுத்துவது,

"வினையா லசத்து விளைவதுணரார்

வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமும் ஓரார் வினையாளர் மிக்க வினைவறி யாரே” (2557)

எனவரும் திருமந்திரமாகும்.

“மக்களுக்கு வினைத்தொடர்பு உள்ளவரையிலும் அதனால் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றி நிகழும் விபரீதவுணர்வும் ஆகிய அசத்துக்கள் விளையும் என்பதனை உணரமாட்டார். மெய்யுணர்வுடைய ஆசிரியன் அருள்பெற்ற நிலையில் வினை ஒழிந்துபோம் என்பதனையும் உணர மாட்டார். வினையொழியவே பாசங்களினின்றும் விடுபடுத லாகிய வீடுபேறு தாம் என்னும் மெய்ந்நூற்பொருளையும் ஒதியுணர்ந்திலர். வினைத்தொடர்பிற்பட்டோர் வினை