பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

657


காரணமாகவுளவாம் மிக்க துன்ப விளைவினை அறிய மாட்டாராயினர்” என்பது இதன் பொருளாகும்.

உடம்பின் கண்ணதாகிய நுகர்வினை (பிராரத்த) வாதனை உயிரைத் தாக்குவதாகவுள்ள வரையிலும் அதனால் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றிக் காட்சிப்படும் மண்முதல் மாயைகளும் அவைபற்றி நிகழும் விபரீத வுணர்வும் ஆகிய அசத்துக்கள் நீங்கிய பின்னரும் மீண்டும் உயிரை வந்து கூடுவன ஆதலால் அதற்கெல்லாம் மூலமாகிய பிராரத்த வாசனை முற்றிலும் நீங்கினாலன்றி அவ் அசத்துப் பொருள்களைக் கீழ்ப்படுத்து மெய்யுணர்வு மேலோங்குதல் இயலாது. ஆகவே பிராரத்த வாசனை பற்றறக் கழிதற் பொருட்டு மெய்யுணர்வுடையாரை நாடிவழிபடுதல் வேண்டும். அவ்வழிபாட்டினால் வினைநீங்கி மெய்யுணர்வு மேம்பட்டு நிகழும். ஆதலால் மெய்யுணர்வுடைய சிவஞானிகளை அன்பினால் வழிபடுக என அறிவுறுத்துவது,

"வினைய லசத்து விளைதலான் ஞானம் வினைதீரி னன்றி விளையா- வினைதீர் ஞானத்தை நாடித்தொழவே அதுநிகழும் ஆனந்தால் அன்பிற் றொழு” (79)

எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். இதன் கண் ஞானம் என்றது சிவஞானிகளை. இவ்வெண்பா மேற்குறித்த திருமந்திரத்தினை அடியொற்றியமைந்துள்ளமை கானலாம்.

வேதத்துட் கூறப்படும் மகாவாக்கியப் பொருளைக் குருமுகமாகவுணர்ந்து பயன் பெறுமாறு கூறுவது,

"நீயது வானாயென நின்ற பேருரை

ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந்தானந்தியாகுமே” (2577)

எனவரும் திருமந்திரமாகும்.

“நீ அது ஆனாய்’ என்னும் பொருளில் ஆசிரியன்

εωσ. θ). στ. 6υ. 42