பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

659


பொருளைச் சைவசித்தாந்த மரபுக்கேற்ப விளக்கியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணர்தற்குரியதாகும்.

மேற்குறித்த மகாவாக்கியமாகிய பெரும்பெரும் பெயர்ப் பொருளாகத் திகழ்வது சிவபரம் பொருளே யென்னும் உண்மையினைத் தெளிவுபடுத்தும் வாயிலாகச் சிவபரம்பொருளைத் தரிசிக்குமாறு உணர்த்துவது,

“அறிவறி யாமை பிரண்டு மகற்றிச்

செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறியாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே” (2580)

எனவரும் திருமந்திரமாகும்.

சுட்டறிவாகிய சகலாவத்தையும் எதனையும் அறியாமையாகிய கேவலாவத்தையும் ஆகிய இரண்டினையும் (சிவஞானத்தினால்) நீக்கிப் (பொருள் தோறும்) செறிவுடையதாய் அறிவேயுருவாய் எங்கும் நீக்கமறக் கலந்து நின்ற சிவபெருமானை ஆன்மபோதத்தால் வேறாக நின்றுணராது அவனருளோடு ஒன்றியிருந்து எம்முயிர்க் குயிராய பெருமான் என்று அன்பினாற் பேணிப் போற்றும் அருளாகிய இலக்கினை யுனராதவர்கள் சிவபரம் பொருளைக் கண்டு கொள்ளும் திறமறியாதார் என்பது மேற்குறித்த திருமந்திரத்தின் பொருளாகும்.

ஆசிரியனது அருள் நோக்கத்தால் இருவகைப் பாசமும் நீங்கிக் கேட்கும் முறையிற் கேட்டுச் சிந்திக்கும் முறையிற் சிந்தித்து அன்புசெய்து அருள்வழி அடங்கிநிற்கும் இயல்பினர்க்கு இறைவனியல்பு கேட்குங்காலத்துப் பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றியும், சிந்திக்குங் காலத்துக் கலப்புப் பற்றி அபேதமாய்த் தோன்றியும் தெளிந்த பின்னர் இவ்விரண்டுமின்றி நுண்ணியனும்பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றிலுந் தோய்விலனாய்ப் பேதாபேதமாய்த் தோன்றியும் நிற்கும் அம்முதல்வனது தன்மை இனிது விளங்கும் என இவ்வாறு தெளிதலின் இயல்பினை விளக்குவது,