பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே

அறிவுதனை அருளினான் அறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்களோடும்

கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில் பிறியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப்

பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி

நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே” (282)

எனவரும் சிவஞான சித்தியாராகும். குழைந்திருத்தல் என்றது, ஆன்மகத்தியை, மேற்கூறியவாறு கேவல சகலங்களிற் பொருந்துதலும் தற்போதம் முனைத்தலும் ஆகிய இரண்டு மின்றி அருளிலேயழுந்தி எங்கும் சிவமயமே காண்டல் சிவதரிசனமாம் என்னும் இவ்விருத்தம் மேற்குறித்த திருமந்திரத்தின் விளக்கமாதல் காணலாம்.

"அறிவறி யாமை யகன்ற வாருயிர்

அறிவறி யாத பேரருளைக் கூடிடின் பிறிவறி யாதவப் பிரானுட் கொண்டுபோய்ப்

பிறிவறி யாவகை வைக்கும் பின்ன்ையே’

எனவரும் பதி பசு பாச விளக்கம் இங்கு நினைத்தற் குரியதாகும்.

உயிர்கள் வாழ்க்கை நுகர்ச்சிகளை நுகர்தற்குரிய வழிகளாக அமைந்தன. மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறும் ஆம். இவற்றுள் முதல் மூன்றும் சொல்லுலகம் எனவும் பின் மூன்றும் பொரு ளுலகம் எனவும் கூறப்படும். இங்குச் சொல்லப்பட்ட சொல்லும் பொருளும் ஆகிய அறுவகை நெறிகளுள், மந்திரம் பதத்திலும், பதம் வன்னத்திலும், வன்னம் புவனத்திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கலையிலும் அடங்க ஒடுக்கிக் கலையைத் திரோதான சத்தியிலும், திரோதான சத்தியைச் சிவத்திலும் அடங்குமாறு குரு வானவர் தக்கையினால் மாணாக்கனைச் சோதித்துத் துய்மை செய்தல் அத்துவா சோதனை எனப்படும்.