பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

661


அத்துவா - வழி.

"பொல்லாத என்னழுக்கிற் புகுவான் என்னைப்

புறம்புறமே சோதித்த புனிதன்” (6)

என்பது திருநாவுக்கரசர் அருளிச்செயல்.

ஆசிரியன் அத்துவாக்களைச் சோதித்துத் தீக்கை செய்ய அதனால் மாணவனிடத்தே சிவம் பிரகாசிக்குமாறு உணர்த்துவது,

"அறிவறி வென்றங் கரற்றும் உலகம்

அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறிவானால் அறிவறி யாமை அழகியவாறே” (2637)

எனவரும் திருமந்திரமாகும்.

கட்டுனர்வாகிய குறையுடைய அறிவினையே அறிவு என்று சொல்லி அரற்றுவர் உலகத்தார். அறிவு இத்தகையதென்பதனையும் அறியாமை இத்தகைய தென்பதனையும் அவருள் யாரும் அறியமாட்டார். அறிவும் அறியாமையும் விரவிய தம் நிலையைக் கடந்து அறிவே யுருவாகிய சிவத்தின் வழி அடங்கி நிற்பாராயின் அவர்தம் சுட்டறிவினாலறிதலாகிய அறியாமைகெட நிற்கும் நிலை சிவப்பிரகாசமாகிய பேரழகினைத் தருவதாகும் என்பது மேற்குறித்த திருமந்திரத்தின் பொருள் ஆகும்.

இங்கு அறிவு என்றது, கருவிகளின் நீங்கிச் சிவஞானத்தினால் முற்றிலும் அறிவே விளங்கப் பெறும் சுத்தாவத்தையினை. அறியாமை என்றது, கருவிகளுடன் கூடாமையால் ஒன்றும் விளங்காமையாகிய கேவலா வத்தையினை. அறிவறியாமை என்றது, அறிவும் அறியாமை யும் விரவிய சகலாவத்தையினை, அறிவாதல் சுத்த அறிவாகிய சிவஞானத்துடன் பொருந்துதல். அறிவு அறியாமை என்றது, சுட்டுனர்வாகிய உயிரறிவினால் அறியாமை, என்றது ஓங்குனர்வாகிய சிவஞானத்துள் ஒடுங்கித் தற்போதம் கெடுதல்.