பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஒன்றாய் நித்தமாய் உள்ளது என்பர் நையாயிகர் முதலியோர். அதனை மறுத்துப் பல வாய் ஏகதேசமாய் நிலையற்றதாய் உள்ளது காலம் என்பர் சைவசித்தாந்திகள். காலம் ஒன்றாயிருக்குமானால் நடத்தல் முதலிய தொழில்களும் இறப்பு நிகழ்வு முதலியவற்றால் வேறுபடுதலின்றி ஒன்றே யாதல் வேண்டும். அவ்வாறன்றி இறப்பு நிகழ்வு முதலியனவாய் நிகழுந் தொழிற் பாகுபாட்டிற்குக் காரனம் காலத்தினது பாகுபாடேயாதலின் காலம் பலவாதல் அறிக என விளக்கந்தருவர் சிவஞானமுனிவர். ஞாயிற்றின் செலவு முதலிய செயற்கையாலன்றித் தொழிலின் தொடக்கம் அதன் நிகழ்வு அதன் முடிவு ஆகிய இயற்கையால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எனப் பலவகையாகப் பகுக்கப் படுதலின் காலம் ஒன்றெனக் கூறுதல் பொருந்தாது. ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

"இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச்

சிறப்புடை மரபின் அம்முக் காலமும்”

எனக் காலம் மூன்றெனக் குறித்துள்ளமை காணலாம். இவ்வாறு காலம் பலவேறு வகைப்படும் என்பது பெறப்படவே காலம் என்பது தம்முட் பலவுமாய்ச் சடமுமாகலின் அது தோன்றி நின்றழியும் நிலையில் பொருளே யென்பதும் அதுபற்றி விரிவின்றிச் சுருங்கிய ஏகதேசப் பொருள் என்பதும் தாமே பெறப்படும். இத்தகைய காலவரையறையின் அகப்படாது நிற்பதே நிலையுடைய பொருளாகும். காலம் நிலையில்பொருள் எனக் கொள்வது பற்றிக் காலங்கடந்த நிலையுடைய பொருள் உண்டெனக் கோடற்கு எத்தகைய தடையுமில்லை.

'காலம் உலகம்’ எனவரும் இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் காலம் என்றது, உயர்தினை மருங்கிற் பால்பிரிந்திசைக்கும் உணர்வுடைப்பொருளாதலிள் அஃது அழிதல் மாலைத்தாய் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னுப் பகுப்பினாற் பலவாய் அறிவில் பொருளாயுள்ள காலத்தினைக் குறியாது அதனை உலகுயிர்களின் நிகழ்ச்சிகளில் வைத்துத்

6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல், 3.