பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஒன்பதாந்தந்திரம்

திருமந்திரத்தின் முடிவில் உள்ள ஒன்பதாந் தந்திரம்,

தசகாரியத்துள் ஒன்றாகிய சிவபோகம் என்னும் பேரின்ப

நிலையை விளக்கும் முறையில் அமைந்துளது. இங்குச்

சிவபோகம் என்றது, உயிர் சிவயோகத்தாற் சித்துடன் கூடிய

நிலையில் தன்னை மறந்து சிவனது பேரருளில்

திளைத்தின்புறுதலாகிய சிவசாயுச்சிய நிலையினை.

இத்தந்திரத்துட் குருமடதரிசனம் என்பது முதலாகச் சர்வ

வியாபி என்பதீறாக இருபத்திரண்டு உட்பிரிவுகள் உள்ளன.

இவற்றுட் குருமட தரிசனம், ஞானகுரு தரிசனம், திருக்

கூத்துத் தரிசனம், ஆகாசப்பேறு, ஞானோதயம், சத்திய

ஞானானந்தம், சொருபஉதயம், சிவதரிசனம் என்னும்

பகுதிகள் சிவயோகிகளின் அநுபவநிலையைக் குறிப்பன. பிரணவசமாதி, துலசூக்கும அதிசூக்கும பஞ்சாக்கரங்கள்,

மோனசமாதி என்னும் பகுதிகள் எல்லாப்பொருள்களையுந் தன்னகத்தே அடக்கியுள்ளன திருவைந்தெழுத்தினை அவ்வத்தானத்தில் வைத்துத்தியானிக்கும் நிலையில்

சிவபோகத்து அழுந்துந் திறத்தினைத்தெளிய விளக்குவன. இப்பகுதிகளிற் கூறப்படும் தத்துவநுட்பங்கள் உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய மெய்கண்ட நூல்களில் எடுத்தாளப்பெற்றன. திருக்கூத்துத் தரிசனம் என்ற பகுதி சைவத்தின் மிகச் சிறந்த நுண்பொருள்

களை விளக்குவது. இதிற்கூறப்படும் சிவானந்தக்கூத்து என்பது, சிவஞானிகள் என்றும் தம் மெயயுணர்விற் கண்டு களிக்கும் ஆனந்தக் கூத்தாகும். இதனை,

‘அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமே

யான அம்பலமுந்தம் உண்ணிறைந்த ஞானத்தெழும் ஆனந்த

ஒருபெருந்திருக் கூத்தும்” (பெரிய திருஞான. 150)

எனக் குறிப்பிடுவர் சேக்கிழார் நாயனார்.

“குறியொன்றுமில்லாத கூத்தன்றன் கூத்து”

(திருவா. அச்சோ.)

என்பர் திருவாதவூரடிகள்.