பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


- சிவாயநம வென்னுந் திருவெழுத் தஞ்சாலே

அவாயமற நின்றாடு வான்” (உண்ம்ை, 31)

என ஆசிரியர் கூறும் விடையாகவும் திருவதிகை மனவாசகங் கடந்தார் அறிவுறுத்தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். கூத்தப்பெருமானது ஆடல் திருமேனி, படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களின் அமைப்பினைத் தன்னகத்தே கொண்டது என்பது,

“அரன்துடி தோற்றம், அமைத்தல் திதியாம். 'அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம் அரனுற் றணைப்பில் அமருந் திரோதாயி அரனடியென்றும் அனுக்கிரகந்தானே” (2799)

எனவரும் திருமந்திரமாகும். “கூத்தப்பெருமான் (வலக் கையில் ஏந்திய உடுக்கை படைப்புத்தொழிலைக் குறிப்பதாகும். அமைத்த (வலக்) கை காத்தற்றொழிலை யுணர்த்தும். அம்முதல்வன் (இடக்கையில்) ஏந்தியதியின் அமைப்பினைக் கூறின் அழித்தற்றொழிலாகும். இறைவன் ஊன்றிய திருவடியினால் (முயலகனை) அனைத்துள்ள நிலையில் மறைத்தற்றொழில் பொருந்தியுள்ளது. அவ் விறைவனது தூக்கியதிருவடி எக்காலத்தும் மன்னுயிர்கட்கு அருள் புரியுந் திறத்தைக் குறிப்பதாகும்” என்பது இதன் பொருள். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைப்பது,

"தோற்றந் துடியதனில், தோயுந்திதியமைப்பில், சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம், முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு” (35)

எனவரும் உண்மை விளக்கமாகும். உடுக்கையேந்திய கையிலே படைத்தலும், அமைத்த திருக்கையிலே காத்தலும், தியேந்திய கையிலே அழித்தலும், உறுதியாக ஊன்றிய திருவடியிலே மறைத்தலும், தூக்கிய திருவடியிலே அருளலாகிய வீடுபேறும் நிகழ இறைவன் ஆடல் புரிதலை நாடியுணர்வாயாக என்பது இதன்பொருள்.