பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

669


இறைவன் வகுத்த நியதியின் வழியே அடியார்கள் இசைந்து நடக்குமாறு உணர்த்துவது ஊழ்’ என்னும் பகுதியாகும். மெய்யுணர்வுடைய பெரியோர்கள் தமது உடம்பைச் செதுக்கினாலும் வெட்டினாலும் செஞ் சந்தனத்தைப் பூசினாலும் தலையில் உளியினால் அடித்தாலும் ஞானமே திருமேனியாகவுடைய இறைவனது அருளின் வழி நிற்றலல்லது தம் உள்ளத்தே கவற்சியும் களிப்பும் இன்றித் தம் இயல்பாகிய பெருமையில் வழுவாது நிற்பர் என அறிவுறுத்துவது, •,

“செற்றிலென் சீவிலென் செஞ்சாந் தணியலென்

மத்தகத்தேயுளி நாட்டிமறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழியல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே” (2847)

எனவரும் திருமந்திரமாகும்.

சிவனைத் தரிசிக்குமாறு உணர்த்துவது. சிவதரிசனம் என்ற பகுதியாகும். ஆன்மா எனவும் சிவன் எனவும் பிரித்து 'உணரக்கூடிய நிலையில் அவ்விருபொருளும் வேறாய் நிற்றல் இல்லை. ஆன்மாவின் உணர்வினுள்ளே உயிர்க்குயிராகிய சிவனும் வெளிப்பட்டுத் தோன்றுவான். (அம்முதல்வனைச் சிந்தித்தற் கருவியாகிய) சிந்தை தெளிவுபெறும்படி சிவஞானத்தால் தெளிந்துணர வல்லார்க்கு அவர்தம் சிந்தையினுள்ளே சிவபெருமான் வீற்றிருந்தருள்கின்றான் என அறிவுறுத்துவது, -

"சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை

சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும் * சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்

சிந்தையி னுள்ளே சிவனிருந்தானே” (2853)

எனவரும் திருமந்திரமாகும். இதன் முதலிரண்டடிகளிலும் சிந்தை என்றது ஆன்மாவை பின் இரண்டடிகளிலும் சிந்தை என்றது அகக்கருவியாகிய சித்தத்தை. ஆன்மாவும் சிவ( பொருட்டன்மையால் வேறுபொருளாயினும் உயிர்கே பிரிப்பின்றி அவையே தானேயாய்க் கலந்துள்ள