பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தன்மையால் ஒன்றாதலின் உயிரையும் சிவத்தையும் வேறு பிரித்தல் இயலாதென்பார், சிந்தையதென்னச் சிவனென்ன வேறில்லை என்றார். சிந்தையது என்புழி அது பகுதிப் பொருள் விகுதி. உயிர்களோடு இறைவன் கொண்டுள்ள அத்துவித நிலையாகிய இத்தொடர்பினை,

"அண்டமோ ரணுவாம் பெருமை கொண்டனுவோர்

அண்டமாம் சிறுமை கொண்டடியேன் உண்டஆண் உனக்காம் வகையெணதுள்ளம்

உள்கலந்தெழு பரஞ்சோதி” (9)

எனவரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பா விளங்க உணர்த்துதல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

"எங்ங் கிறைவனுளனென்பாய் மனனேயான்

எங்ங் கெனத் திரிவாரின்”

(நன்னுால். சங்கர. உரைமேற்கோள்)

என்பதும் இதனையே வலியுறுத்தும். சிவஞானத் தெளி வுடையோர் சிந்தையிலே இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்னும் உண்மையினை,

“சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுட் சிவமுமாகி’

எனவரும் அப்பர் தேவாரம் இனிது விளக்குகின்றது.

சிவபெருமானது உண்மையியல்பினைக் காணுமாறு உணர்த்துவது,

“உணர்வும் அவனே உயிரும் அவனே

புணரும் அவனே புலவி அவனே இனரும் அவன்தன்னை எண்ணலு மாகான்

துனரின் மலர்க்கந்தம் துன்னிநின்றானே” (2857)

எனவரும் திருமந்திரமாகும்.

“உயிருணர்வில் விளங்குபவனும் அவ்விறைவனே. அவ்வுணர்வினைத் தோற்றுவித்து உயிரில் நிலைத்திருப் பவனும் அவனே. எல்லாப் பொருள்களோடும் பிரிவின்றிப்