பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

59


தொழிற்படுத்தும் உணர்வினதாகிய தெய்வ ஆற்றலையே குறிப்பதாகும். இந்நுட்பம் ‘காலம் என்றது காலக்கடவுளை” என நச்சினார்க்கினியரும், 'காலம் என்பது முன்னும் பின்னும் நடுவுமாகி என்றும் உள்ளதோர் பொருள்” எனத் தெய்வச்சிலையாரும் தரும் உரைவிளக்கங்களால் இனிது புலனாம். இங்கு உலகம்’ என்றது நிலம் தீ நீர் வளி விசும் போடைந்தும் கலந்த திரட்சியாகிய அறிவில்பொருளைக் குறியாது அத்திரட்சி மேலும் கீழும் நடுவுமாய்விரிந்து எல்லாவுயிருந்தோற்றுதற்கு இடந்தரும்வண்ணம் அதனை உள்ளும் புறம்பும் உடனிருந்து இயக்கும் உணர்வுடைய தெய்வ ஆற்றலைக் குறித்ததென்பது தெய்வச்சிலையார் உரைவிளக்கத்தால் நன்கு புலனாம். இங்கு உயிர் என்றது உயிர்களின் அறிவு விளக்கத்தைச் சுட்டி நிற்றலின் உயர்தினையாயிற்று. ஈண்டு 'உடம்பு’ என்பது இவ்வுலகில் நிலையிலதாய் அழியுந்தன்மையாதாகிய ஐம்பூதச் சேர்க்கையாலாகிய அறிவில்லாத துலவுடம்பினைக் குறியாது மனம் புத்தி அகங்காரம் சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் எண்வகைப் பொருள்களால் இயன்று வினையினாற் கட்டுப்பட்டு நுண்ணிதாய் ஒர் உயிர் மேற்கொள்ளுதற்குரிய எல்லாப்பிறப்பிற்கும் உள்ளாகி நிற்கும் நுண்ணுடம்பினைக் குறித்த இச்சொல் ஆகுபெயராய் அவ்வுடம்பினை உள்நின்றியக்கும் உணர்வாற்றலைக் குறித்ததெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.

'காலம் உலகம்’ என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தில் 'பால்வரை தெய்வம்’ என்பதும் வினை’ என்பதும் தனித்தனியே எண்ணப்பெற்றிருத்தலால் பால்வரை தெய்வம் என்பது வேறு வினை என்பது வேறு என்பது நன்கு துணியப்படும். 'பால்வரை தெய்வம் என்பது ஆனும் பெண்ணும் அலியுமாகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள்” எனத் தெய்வச்சிலையாரும்,"எல்லோர்க்கும் இன்பத்துன்பத்திற்குக் காரணமாக இரு வினையையும் வகுப்பது” எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பொருள் வரைந்துள்ளார்கள். எனவே இச்சொல், கடவுளாகிய முழுமுதற்பொருளையே குறித்து நின்ற தென்பது தொல்காப்பியவுரையாசிரியர் அனைவர்க்கும்