பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே” (2883)

எனவரும் திருமந்திரமாகும். இதன்கண் பார்ப்பான் என்றது ஆன்மா. பசு - ஐம்பொறிகள். மேய்ப்பார் - குரு. வெறிஉலகப் பொருள்களிற் செல்லும் மருட்சி. பால் - நல்லுனர்வு

வரையுறைமாட்சி என்பது தியான எல்லையாகிய மலையின் உச்சியில் உறைவோராகிய சிவஞானிகளின் மாண்பினையுணர்த்தும் பகுதியாகும். அப்பகுதியிலுள்ளது,

“உரையற்ற தொன்றையுரை செயும் ஊமர்காண் கரையற்ற தொன்றைக் கரைகான லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே' (2955)

எனவரும் திருமந்திரமாகும். “நால்வகை வாக்குக்களையும் கடந்து நின்ற ஒப்பற்ற பரம்பொருளை ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் சொல்ல முற்படும் ஊமைகளே, கரைகாணாக் கடலாகவுள்ள அதனை எல்லை கண்டு கூற இயலுமோ? திரையடங்கிய நீர்நிலைபோன்று சித்தந் தெளிந்துள்ள சிவஞானிகளுக்குக் கட்டமைந்த சடையின னாகிய சிவபெருமான் களங்கமற வெளிப்பட்டிருந்தான்” என்பது இதன் பொருளாகும்.

“சொல்லும் இடமன்று சொல்லப்புகுமிடம்

எல்லை சிவனுக் கென் றுந் தீபற என்றால் நாம் என்சொல்கோம் உந்தீபற” (29)

எனவரும் உய்யவந்த தேவநாயனார் வாய்மொழி இங்கு நினைத்தற்குரியதாகும்.

அயரா அன்பினால் அரன்கழல் அனைந்தோராகிய சீவன்முத்தர்களது இயல்பினை விளக்குவது,

“ஒழிந்தேன் பிறவி உறவென்னும்பாசங்

கழிந்தேன் கடவுளும் நானுமொன்றானேன் அழிந்தாங்கினிவரும் ஆக்கமும் வேண்டேன் செழுஞ் சார்புடைய சிவனைக் கண்டேனே' (2958)